பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310, பேரிய புராண விளக்கம்

முன்றில் உருள்பருக்கை யுடனொக்க எம்பெருமான் வாகீசர் உழவாரத் தினில்ஏந்தி வம்பலர்மென் பூங்கமல வாவியினிற் புகஎறிந்தார்.”, புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திருந்த நல்லோர்’ என்று திருநாவுக்கரசு நாயனார் இருந்த நிலையைச் சேக்கிழார் பாடுவது இங்கே உணரத் தக்கது. கூடும்-தங்களுடைய திருவுள்ளங்களிள் சேர்ந்திருக் கும். அன்பினில்-பக்தியின் வலிமையினால், கும்பிடலே - தங்களுடைய கைகளைக் குவித்து வன்மீகநாதரைக் கும் பிட்டு வணங்குவதையே. அன்றி-அல்லாமல். வீடும்-முக்தி யையும். வேண்டா-விரும்பாத விறவின்-வீரத்தோடு, விளங்கினார்-அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் இருந்த தொண்டர்கள் விளங்கினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். நின்னைத், துன்னித் துன்னி வழிபடுவதன் பயம், இன்னும் அவையாகுக. (பரிபாடல், 14:29-31) என வருதல் இங்கே உணர்தற்குரியது.

பிறகு உள்ள 9-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"அவர்கள் அணிந்து கொள்ளும் மாலை உருத்திராக்க மணி மாலையே; அவர்கள் உடுக்கும் உடையும் கந்தல் துணியே; அவர்கள் தாங்கும் பொறுப்புப் பரமேசுவரராகிய வன்மீக நாதருடைய திருப்பணியே; அதனை அன்றி வேறு ஒரு பொறுப்பும் இல்லாதவர்கள் அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் உள்ள திருத்தொண்டர்கள்; குளிர்ச்சி யைப் பெற்ற பக்தியை உடையவர்கள் அவர்கள்; எதனா லும் ஒரு குறைவும் இல்லாதவர்கள்: அவர்களுடைய வீரம் அடியேனால் பாடும் இயல்புக்குள் அடங்குவதோ?’ பாடல் வருமாறு:

'ஆரம் கண்டிகை, ஆடையும் கந்தையே, பாரம் ஈசன் பணிஅலதொன்றிலார், ஈர அன்பினர் யாதும் குறைவிலார்

விரம் என்னால் விளம்பும் தகையதோ!'