பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 3.), 9 குணப்பெருங் குன்றனார்.' குணம்என்னும் குன்றேறி நின்றார்." (திருக்குறள், 29), குன்றுபோற் குணத் தான்.' (கம்ப்ராம்ர்யணம், வேள்விடப்படலம், 58,) "மாயமில் குணக்குன்றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.' jo (யசோதர காவியம், 23) என வருவனவற்றைக் காண்க.

அடுத்து வரும் 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு: இழப்பும் ஊதியமும் இல்லாத செல்வத்தைப் பெற்ற வர்கள்; உடைந்த பானையின் ஒட்டையும் சிவந்த தங்கத் தையும் ஒரே சமமாகப் பார்க்கிறவர்கள்; தங்களுடைய திருவுள்ளங்களில் சேர்ந்து விளங்கும் பக்தியினால் வன்மீக நாதரைத் தங்களுடைய கைகளைக் குவித்துக் கும்பிடுவதை யும் வணங்குவதையும் அல்லாமல் முக்தியையும் விரும்பாத வீரத்தோடு அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் இருந்த தொண் டர் க ள் விளங்கினார்கள். பாடல் வருமாறு:

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்; ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்; கூடும் அன்பினிற் கும்பிட லேஅன்றி விடும் வேண்டா விறவின் விளங்கினார்.' கேடும்-இழப்பும்; நஷ்டமும். ஆக்கமும்-ஊதியமும்; லாபமும் செலவும் வரவும் எனலும் ஆம். கெட்ட-இல் லாமற் போன திருவினார்-செல்வத்தைப் பெற்றவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். சென்றடை யாத திருவுtையானை’’ என வருதல் காண்க. ஒடும்-மண்பானை உடைந்த ஒட்டாஞ் சில்லையும். செம்பொனும்-சிவந்த தங்கத்தையும். பொனும்: இடைக்குறை. ஒட்டை முன் னால் சொன்னார், அதைப் பார்த்து ஒதுக்கித் தள்ளுவதைப் போலத் தங்கத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள் என்ப தைக் குறிக்க. ஒக்கவே-சமானமாகவே. நோக்குவார்பார்ப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க ஆங்கவையும் உம்பர்பிரான் திரு.