பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பெரிய புராண விளக்கம்

யூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்

மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் இது காதல் உறைப்பின் நெறிகின்றார் கோதி லாத குணப்பெருங் குன்றனார்.'

பூதம் ஐந்தும்-பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் ஐந்து பூதங்களும் பூதம்; ஒருமை பன்மை மயக்கம். நிலையின்-இயல்பாக உள்ள தங்களுடைய நிலைகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். கலங்கினும்-கலக்கத்தை அடைந்தாலும். மாது-விருப்பம் மருவிய அல்லியங் கோதையை. ஒர்-ஒப்பற்ற- பாகர்-வாமபாகத்கில் எழுந் தருளச் செய்த வன்மீகநாதருடைய மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தாள்-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். மறப்புஎக்காலத்திலும் மறத்தலை. இலார்-இல்லாதவர்கள்; ஒருமை பன்மை மயக்கம்: இடைக்குறை. ஒது-பிறர் பாராட் டிக் கூறும். காதல்-வன்மீக நாதரை வணங்கும் விருப்பத்தி னுடைய. உறைப்பின்-உறுதியாகிய, நெறி-வழியில்: நின்றார்-நிலைத்து நின்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம் கோது-சிறிதளவு குற்றமும். இலாத-இல்லாத இடைக்குறை. குண்டநல்ல குணங்களில்; ஒருமை பன்மை மயக்கம். ப்; சந்தி. பெரும்-பெருமையைப் பெற்ற. குன்று-மலையை. அன்ார்-அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் உள்ள தொண்டர்கள் போல விளங்குபவர்கள் ஒருமை பன்மை மயக்கம்; இடைக்குறை. .

பூதங்கள் கலங்கினாலும் இறைவன் திருவடிகளை மறக்காதவர்கள்; வானம் துளங்கிலென் மண்கம்பமாகி வென் மால்வரையும், தானம் துளங்கித் தலைதடு மாறி வேன் தண்கடலும், மீனம் படிலென் விரிசுடர் விழிலென் வேலைநஞ்சுண், டுனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே’’ என்று திருநாவுக்கரசு நாயனார் பாடி யகுளியதைக் காண்க.