பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 307

லின் திரிபு. எத்திசையும்-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். விளக் கினார்-விளக்கத்தை அடையுமாறு செய்பவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பேச-எடுத்துக் கூற. ஒண்ணா-முடியாத, ப்:சந்தி. பெருமை-பெருமையோடு. பிறங்கினார்-அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் இருந்த தொண்டர்கள் விளங்கினார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

நீறு தூயது. தூவண நிறகலம் பொலிய’’ என்று திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், தூயவெண் ணிற்றி னன்’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், துரய வெண் னிறு துதைந்தெழு துளங்கொளி. , 'துயவெள்ளை நீறணி எம்பெருமான்' என்று மாணிக்கவாசகரும், தூய நீறு பொன்மேனியில் விளங்க', 'துரய சுடர்த்திருநீறு விரும்பு தொழும்புள்ளார். , பூதி யாகிய புனித நீறாடி.’’’ 'துரயவெண் ணிறு துதைந்தபொன் மேனியும்.’’, ‘தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுதணிந்து' என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பின்பு உள்ள 7-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் ஐந்து பூதங்களும் தங்களுக்கு இயல்பாக உள்ள நிலையிலிருந்தும் கலக்கத்தை அடைந்தாலும், விருப்பம் மருவிய உமாதேவி யைத் தம்முடைய ஒப்பற்ற வாமபாகத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் வன்மீக நாதருடைய செந்தாமரைமலர் களைப் போன்ற திருவடிகளை மறவாதவர்கள் பிறர் பாராட்டிப் பேசும் வன்மீக நாதரைப் பணியும் விருப்பத்தில் உரமுடைய வழியில் நின்றவர்கள்; சிறிதளவும் குற்றம் இல்லாத குணங்களில் பெருமையைப் பெற்றுக் குன்றைப் போல விளங்குபவர்கள் அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் இருந்த தொண்டர்கள்."

பாடல் வருமாறு: