பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பெரிய புராண விளக்கம்

அண்டமாய் நின்ற ஆதியே., அப்பன் என்னை வந், தாண்டுகொண் டருளிய அற்புதம்', 'அச்சன் என்னை ஆண்டு., 'அத்தன் மாமலர்ச் சேவடி.’’, ’அத்தன் பெருந்துறையான்., அத்தன்எனக் கருளியவா றார் பெறுவார்' என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற் றைக் காண்க.

பிறகு வரும் 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அழுக்குச் சிறிதளவும் இல்லாதவையும், உருத்திராக்க மணி மாலைகளை அணிந்து விளங்குபவையும் ஆகிய தங்க ளுடைய திருமேனிகளின்மேல் பூசிக்கொள்ளும் விபூதி தூய்மையுடையதாக இருப்பதைப்போலத் தங்களுடைய திருவுள்ளங்களிலும் தூய்மையைப் பெற்றவர்கள்; தங்க ளுடைய திருமேனிகளில் வீசும் ஒளியினால் எல்லாத் திசை களையும் விளக்கத்தை அடையுமாறு செய்பவர்கள்; சொல் லுவதற்கு முடியாத பெருமையோடு விளங்கினார்கள் அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் இருந்த தொண்டர்

y

கள். பாடல் வருமாறு:

'மாசி லாத மணிதிகழ் மேனிமேற்

பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள். தேசி னால்எத் திசையும் விளக்கினார் பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்.'

மாசு-அழுக்குச் சிறிதளவும். இலாத-இல்லாதவையும்; இடைக்குறை, மணி-உருத்திராக்க மணிமாலைகள்: ஒருமை பன்மை மயக்கம். திகழ்-விளங்குபவையும் ஆகிய பெயரெச்ச வினையாலணையும் பெயர். மேனிமேல்-தங்க ளுடைய திருமேனிகளின்மீது; ஒருமை, பன்மை மயக்கம். பூசும்-பூசிக்கொள்ளும். நீறுபோல்-விபூதி தூய்மை உடைய தாக இருப்பதைப் போல, உள்ளும்-தங்களுடைய திருவுள் ளங்களிலும் ஒருமை பன்மை மயக்கம். புனிதர்கள்-தூய்மை யைப் பெற்றவர்கள். தேசினால்-தங்களுடைய திருமேனி கள் வீசும் ஒளியினால். தேசு-தேஜஸ் என்ற வடசொல்