பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 : பெரிய புராண விளக்கம்

அடைந்தவர்கள் சில்ர்,இக்காலத்திலும் வாழ்ந்து சிவபெரு மானை வழிபடுபவர்கள் சில பேர்கள், இனிமேலும் பிறந்து சிவபெருமானை வழிபடப் போகிறவர்கள் சில பேர்கள் ஆகிய யாவரையும்பற்றிச் சேக்கிழார் பாடியருளினார். திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், திருமூல நாயனார், நின்ற சீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், திருநீல கண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார், குறும்ப நாயனார், கணநாத நாயனார், அப்பூதியடிகள் நாயனார், சோமாசி மாற நாயனார் ஆகிய இந்தப் பதினொரு பேர் களும் குருவினுடைய திருவருளால் முக்தியை அடைந்தவர் கள். எறிபத்த நாயனார், குங்கிலியக்கலய நாயனார், முருக நாயனார், கண்ணப்ப நாயனார், ஆனாய நாயனார், அரி வாட்டாய நாயனார், மூர்த்தி நாயனார், சண்டேச நாயனார், திருநாளைப்போவார் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், சாக்கிய நாயனார், கூற்றுவர் நாயனார், தண்டியடிகள் நாயனார், சிறப்புலி நாயனார், உருத்திர பசுபதி நாயனார், கவிக்காம நாயனார், கலிய நாயனார், காரி நாயனார், அதிபத்த நாயனார், நீலநக்க நாயனார், பூசலார் நாயனார், கனம்புல்ல நாயனார், கோட்புலி நாயனார், நமிநந்தியடிகள் நாயனார், கழற் சிங்க நாயனார், வாயிலார் நாயனார், செறுத்துணை நாயனார், புக ழ் த் து ைண நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாய னார், கோச்செங்கட் சோழ நாயனார், ஆகிய முப்பது நாயன்மார்கள் சிவலிங்கத்தைப் பூசை புரிந்து முக்தியைப் பெற்றவர்கள். . திருநீலகண்ட நாயனார், இயற்பகை நாயனார்,மூர்க்க நாயனார், சிறுத்தொண்ட நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், விறன்மிண்ட நாயனார், இடங்கழி நாயனார், முனையடுவார் நாயனார், சத்தி நாயனார், அமர்நீதி நாயனார், மெய்ப்பொருள் நாயனார், ஏனாதிநாத நாயனார். புகழ்ச்சோழ நாயனார், மானக்