பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 23

கஞ்சாற நாயனார், இளையான்குடி மாற நாயனார், காரைக்கால் அம்மையார், கழற்சிங்க நாயனார், கலிக்கம்ப நாயனார், நேச நாயனார் ஆகிய பத்தொன்பது சிவனடி, யார்களும் உருத்திராக்கம் தரித்த சிவபக்தர்களை வழிபட்டுச் சிவகதியை அடைந்தவர்கள்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார்,காரைக்கால் அம்மையார் ஆகிய மூவரும் இசை யில் வன்மை படைத்தவர்கள். திருநாளைப்போவ்ார் நாயனார், ஆனாய நாயனார், திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனார், பரமனையே பாடுவார் ஆகிய நான்கு நாயன்மார்களும் இசைத்தமிழ்நூலில் வன்மை பெற்றவர்கள். ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருமூல நாயனார், காரி நாயனார், பொய்யடிமை இல்லாத புலலர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய ஐந்து நாயன்மார் களும் இயற்றமிழில் தேர்ச்சியைப் பெற்றவர்கள், எஞ்சி. நின்ற நாயன்மார்கள் தவத்தைச் செய்து சிவகதியைப் பெற்றவர்கள். - - - -

இல்லற வாழ்க்கையை நடத்தியவர்கள் திருநீலகண்ட நாயனார், இயற்பகை நாயனார் முதலியவர்கள். மூர்த்தி நாயனார், திருந்ாவுக்கரசு நாயனார் ஆகிய இரண்டு நாயன் மார்களும் துறவறத்தை மேற்கொண்டவர்கள். நைஷ்டிகப் பிரமசாரியாக வாழ்ந்தவர் சண்டேச நாயனார். சிவனடி. யார்களோடு சேர்ந்து சிவகதியைப் பெற்றவர்கள் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரோடு திருநல்லூர்ப்பெருமணத்தில் அந்த நாயனாருடைய திருமணம் நடந்தபோது சோதியில் கலந்தவர்கள் பல பேர்கள். சேரமான் பெருமாள் நாயனார் குதிரைமேல் ஏறிக் கயிலாயம் சென்ற பொழுது அவரோடு சேர்ந்து கயிலாயம் போனவர்கள் கணக்கு இல்லாதவர்கள். சிவபெருமானுடை அடியவர்களிடம் பகைமையை உடைய, வர்களாக இருந்து முக்தியைப் பெற்றவர்கள் சண்டேச