பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெரிய புராண விளக்கம்

நாயனாருடைய தந்தையாராகிய யக்ஞதத்தர், புகழைப் பெற்றவராகிய கோட்புலிநாயனார்கூறியதிருவிரையாக்கலி என்னும் ஆணையை மீறி நடந்த சுற்றத்தினரைப் பகைத் துக் கொண்டு நரகத்தை அடைந்தவர்கள், தவத்தைப் புரிந்: வராகிய மூர்த்தி நாயனார் சிவ பெருமானுக்கு அணியும் சந்தனக் காப்பைத் தடுத்து விலக்கிச் சமணசமயச்சார்பை உடையவனாய் நாட்டை ஆட்சிபுரிந்த கருநட தேயத்தின்

அரசன் முதலிய பலருடைய புராண வரலாறுகளை வகைவகையாகப் பிரித்துக் கூறும் செயல் எளிது அன்றோ?

சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை, யைப் பாடியருளிய காலத்தில் அவருடைய திருவடித் தொண்டைப் புரிந்த தொண்டர்கள் சில பேர்கள். அந்த நாயனாருக்கு முன்னாலேயே உண்மையான தொண்டு களைப் புரிந்தவர்கள் சிலர். அந்த நாயனாருக்குப் பிற். பட்ட காலத்தில் தொண்டு செய்தவர்கள் சில அடியவர் கள். திருத்தொண்டர் புரா ண மா கி ய பெரிய புராணத்தில் சேர்த்துச் சேக்கிழார் நாயனார் கூறிய சேவை புரிந்த தொண்டர்கள் அளவு கடந்தவர்கள். சிவ. பெருமானுக்கு அத்தகைய தொண்டர்கள் செய்த தொண்டு நிலைமையைக் கரைகண்டு கூறுதல் எளிய செயல் அல்லவே, ஓர் உலகமோ? ஒரு தி ைச. யோ? ஒர் ஊரோ ? ஒரு குலமோ? ஒரு திரு நாம மோ? ஒரு காலமோ? உலகத்தில் ஒரே வழியைக் கூறும் க ைதயோ? பல. வழிகளைக் கூறும் பெரிய வரலாறோ? பேர் ஒன்று தானோ? இவை அல்லவே, இத்தகைய பெரிய புராணத்தை உலகத்தில் வாழும் மக்கள் தெரிந்துகொண்டு, சொல்லு வதற்கு அரியவனான நடராஜப்பெருமான்' உலகெலாம்' என்று அடி எடுத்து வழங்கியருள அந்தத் தொடரை முதலில் வைத்துக் கலைமகள் இனிய சொற்களைக் கையில் எடுத்து வழங்கத் தொண்டர் சீர் பரவ வல்லவராகிய சேக்கிழார் பேரிய புராணத்தைப் பாடியருளி நிறைவேற்றினார்.