பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் வரலாறு 25



கரிய நிறத்தை உடைய நீர் நிரம்பிய சமுத்திரத்தைக் கைகளை அடித்து நீந்திக் கரை சேர்தல் எளிது, கடற்கரையில் உள்ள நுட்பமான மணல்களை எண்ணி அளவைச் சொல்லி விடலாம். பெரிய கடலில்வீசும் அலைகளை ஒன்று,இரண்டு, மூன்று என்று எண்ணி எழுதிக்கொண்டு பிறகு எல்லாவற்றையும் கூட்டிக் கணக்கைச் சொல்லிவிடுதலும் கூடும். அத்தச் சமுத்திரத்தில் வாழும் மீன்களையும் கணக்கிட்டுச் சொல்ல முடியும், ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிப் பார்த்து அவற்றின் தொகையைச் சொல்லி விடலாம், சிவபெருமானுடைய திருவடிகளைத் தங்களுடைய தலைகளின்மேல் வைத்துக் கும்பிட்டு வணங்கும் தொண்டர்களின் புராணமாகிய பெரிய புராணத்தை அளவு தெரிந்து கூறுதல் சேக்கிழாருக்கு அல்லாமல் தேவர்களுக்கும் முடியாத செயல்.

தனியான நாயன்மார்கள் அறுபது பேர்கள்:தொகையடியார்கள் ஒன்பது பேர்கள். அவ்வாறு அறுபத்தொன்பது நாயன்மார்களுடைய வரலாறுகளைத் திருநாவலூரில் ஆதி சைவர்களின் மரபில் பிறந்த சடையனாருக்கு அவருடைய பத்தினியாராகிய இசைஞானியாருடைய திருவயிற்றிலிருந்து திருவவதாரம் செய்தருளிய ஆரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார் முன் காலத்தில் பாடியருளிய திருத்தொண்டத் தொகையின்படியும், திருநாரையூரில் திருவவதாரம் செய்தருளிய நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத் தொண்டர் திருஅந்தாதியின்படியும் பெரிய புராணத்தை இரண்டு காண்டங்களாகப் பிரித்து நாயன்மார்களுடைய வரலாறுகளின் விரிவைத் தொகுத்துச் சருக்கங்கள் பதின்மூன்றாக அமைத் துக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்று பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்திற்குப் பெயர் சூட்டித் திருவிருத்தங்கள் நாலாயிரத்து இருநூற்றைம்பத்து மூன்றாக அமைத்து அந்தச் செய்யுட்கள் எல்லாவற்