பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2é பெரிய புராண விளக்கம்

றையும் ஒலைச் சுவடிகளில் வரைந்து மைக்காப்பைச் சாத்தி அழகு அமையும் வண்ணம் ஒரு பையையும் பெற்று அதில் சுவடிகளைச் சேக்கிழார் வைத்துக் கொண்டார்

பிறகு, சேக்கிழார் நாயனார் தொண்டர் புராணத்தைப் பாடும்பொருட்டு எம்மை விட்டுப் போன பிறகு யார் யார் அவருக்குப் பக்கத்தில் இருந்த மக்கள்? புராணம் எவ்வளவு தூரம் வரையில் பாடி முடிந்திருக் கிறது? எஞ்சியிருப்பது எத்தனை? இவற்றைத் தெரிந்து கொண்டு வாருங்கள்' என்று சோழ மன்னன் தூதர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்; அந்தத் தூதர்களுக்குத் தெரியாதவாறு ஒற்றர்களையும் செல்ல விடுத்தான். -

அவ்வாறு சோழ மன்னன் அனுப்பிய வலிமையைப் பெற்ற தூதர்கள் சிலர்திருத்தொண்டர் புராணமாகிய நூல் பாதியளவு பாடி முடிந்திருக்கிறது என்று மன்னனி டம் ஒடிச் சென்று அறிவித்தார்கள். வேறு சில தூதர்கள் மகிழ்ச்சியை அடைந்து சோழ மன்னனிடம் போய்,' "இன்றைக்கோ நாளைத் தினமோ புராணம் பாடி நிறை வேறும்” என்று கூறினார்கள். அதைக் கேட்டுச் சோழ மன்னன் வணங்கினான். வேறு சிலர், இந்த நல்ல புராணம் பாடி முடிந்து விட்டது' என்று சோழ மன்ன னுக்கு உறுதியாகக் கூறினார்கள்.

செய்தியைத் தன்னிடம் வந்து கூறியவர்கள் எல்லோருக்கும் சோழமன்னன் நவரத்தினங்களையும், மெல்லிய ஆடைகளையும், தங்கக் காசுகளையும் அள்ளி, அள்ளி மகிழ்ச்சியை அடைந்து வாரி வாரி வீசி வழங் கினான். சிவந்த தங்கத்தால் வேயப்பெற்ற திருச்சிற்றம் பலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப்பெருமானுடைய திருநடனத்தையும் வணங்கினான். அந்த நடராஜப்பெரு மான் 'உலகெலாம்'என்று முதல்தொடரைஎடுத்து வழங்க