பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெரிய புராண விளக்கம்

இனிமையான சுவையைப் பெற்ற ஆசீர்வாத வார்த்தை கள் பலவற்றைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

மொட்டையடித்த திருமுடியும், திரிபுண்டரமாக நெற்றியில் அணிந்த விபூதியும், போர்வையும், இரண்டு காதுகளிலும் குண்டலங்களும், தொங்கியாடிய குழை களும், கழுத்தில் உருத்திராக்க மாலையும், கைகளில் உருதித்ராக்க மாலையும், தலையில் உருத்திராக்கமாலை யும் அழகு பெற விளங்கித் தோன்ற, தொண்டர் சீர் பரவு வாராகிய சேக்கிழார் அமர்ந்திருந்த கோலத்தைச் சோழ மன்னன் தன் எதிரில் பார்த்தான். -

அவ்வாறு பார்த்தபோது தன்னுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து தன்னை அறியாமலேயே தன்னுடைய கைகள் தன் தலையின்மேல் ஏறக் கும்பிட்டு, 'இந்தப் பெரியவராகிய சேக்கிழார் கொண்ட வேடமாகிய இது சிவபெருமானுடைய அடியவரின் வேடம், ஒரு குறையும் இல்லாத தவசியின் கோலம்' என்று எண்ணித் தேவர்களின் தலைவராகிய நடராஜப்பெருமானுடைய திருவருளைத் தியானித்து அந்தப் பெருமான் சேக்கிழாரை அடிமையாகக் கொண்ட பெருமையையும் சோழமன்னன். எண்ணி அவருடைய பாதக்குறடுகளை வணங்கினான்.

அவ்வாறு வணங்கிவிட்டுத் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமானுடைய திருவடி களாகிய செந்தாமரை மலர்களை வணங்குவதற்கு நினைத்து வரன்முறைப்படி தருமத்திற் சிறப்பை அடைந்த சேக்கிழாரும், மூவாயிரம் தில்லைவாழ் அந்தணர் களும், துறவறத்திற் சிறந்து விளங்கும் மடாதிபதிகளும் தன்னைப் பின்பற்றி வரச் சோழமன்னன் வந்து திருமாலுக்கும் பிரம தேவனுக்கும் பன்றியுரு எடுத்தும், அன்னப்பறவையின் வடிவத்தை எடுத்தும் திருவடி களையும் திருமுடியையும் தேடிப்பார்த்தும் காண முடியாத