பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 29

பரம்பொருள் யாவரும் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் நடராஜப் பெருமானாக நின்ற கோலத்தைத் தரிசித்தான்.

அவ்வாறு தரிசித்த கண்கள் மலையிலிருந்து குதிக்கும் அருவியைப் போல நீர்த்துளிகளைத் தாரை தாரையாகச் சொரிய, இரண்டு கைகளும் தலையின் மேற் குவிந்து அஞ்சலி செய்ய, உள்ளம் நெகிழ்ந்து திருமேனி முழுவதும் மயிர்க்கூச்சு «Tէք, ஆனந்த சாகரம் கரைபுரண்டு அலைகளை வீச, திருவாயி லிருந்து வெளிப்பட்ட துய வார்த்தைகள் குழற, பக்தியோடு விம்மி விம்மி அழுது நடராஜப் பெருமானுடைய திருவருள் மேம்படச் சேக்கிழாருக்கு முன்னால் தண்டாகாரமாகத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு சோழ மன்னன் சேக்கிழாரை வாழ்த்தினான். -

அப்போது நடராஜப் பெருமான், "சேக்கிழான் நம்முடைய தொண்டர்களின் கீர்த்தியைப் புகழ்ந்து பாட நாம் மகிழ்ச்சியை அடைந்து உலகம் என்று நம்முடைய வாக்காகிய அசரீரி வாக்கினால் அடியெடுத்துக் கூற அவன் பெரிய புராணமாகிய காப்பியத்தைப் L-Ifriqநின்றவேற்றிவிட்டான். வேலாயுதத்தை ஏந்தி நாட்டைப் பாதுகாக்கும் சோழமன்னனே, நீ இந்தப் புராணத்தை விரைவில் கேட்பாயாக' எ ன் று பொன்னம்பல ஆகாசத்தில் ஊக்கத்தை உண்டாக்கும் அழகிய அசரீரி வாக்கும் நடராஜப் பெருமான் திருவடிகளில் அணிந்த சிலம்புகளின் ஒலியும் எழுந்தன.

திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய வார்த்தை களும் சிலம்புகளின் ஒலியும் திருச்சிற்றம்பலத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த மனிதர்களின் காதுகளில் நுழைந்து நிரம்பியது; அல்லாமலும் உலகத்தில் உள்ள