பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3む பெரிய புராண விளக்கம்

சரங்களாகிய மக்கள், விலங்குகள், பறவைகள் முதலியவையும், அசரங்களாகிய மரங்கள், செடிகள, கொடிகள், மலைகள் ஆகியவையும் நெகிழ்ந்து உருக்கத்தை அடைந்து முழங்க, மலைகளைப் போல விளங்கும் திரண்ட தோள்களைப் பெற்ற சோழமாமன்னன் குதூகலத்தை அடைந்து உள்ளத்தில் ஆனந்தத்தை அடைந்தான்.

'சிவபெருமானுடைய தொண்டர்கள் தொண்டுகள் சேய்ததை எடுத்து உரைக்கும் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள நாயன்மார்களின் வரலாறுகளைப் பிறைச்சந்திரனைத் தம்முடைய திருமுடியில் அணிந்த தலை வராகிய நடராஜப் பெருமானார் வழங்கிய திருவருளால் சாத்திரங்கள் விதித்த நீதிநெறியின் வண்ணம் நடக்கும் சேக்கிழாராகிய முனிவர் விரிவாகப் பாடியருளியுள்ளார். அந்த வரலாறுகளைக் கேட்பதற்காக நடராஜப் பெருமா னுடைய அடியவர்கள் எல்லோரும் வேகமாக வருவீர்களாக என்று முரசறையச் செய்து சோழமன்னன் ஒலைகளை எடுத்துப் பெரிய புராணத்தை அவற்றில் வரைந்து ஆட்களையும் திருமுக ஒலையையும் அனுப்பினான்.

சட்டைகளை அணிந்த மக்களும், தம்முடைய வசமிழந்து சில பெ ரு மா ைன த் தியானிக்கும் உள்ளங்களும், பக்தி நீங்காத மேம்பாட்டையுடைய தவம் செய்யும் வாழ்க்கைக்கு உரிய வேலைகளும் உருத்திராச்ச மாலை திருநீறு பன்சாட்சரம் ஓதல் ஆகிய சைவசம யத்தின் சாதனங்களும் அமைந்த சைவ சமயத்தினர்களும் வந்து கூட்டமாகக் கூடினார்கள். х

மறையவர்கள் இருக்குவேதம், யஜுர்வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும் ஒதும் இனிய கானமும், வேதங்களைச் செந்தமிழ் மொழி யினால் பாடியருளியவர்களாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், ! சுந்தரமூர்த்தி