பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு .3 f

நாயனார் என்னும் மூன்று நாயன்மார்களும் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களின் இனிய ஒலியும் விபூதியைப் பூசிக்கொண்டு ஹர ஹர என்று பக்தர்கள் புகழ்ந்து கூறும் பெரிய முழக்கமும், மேகத்தின் முழக்கத்தைப் போல, முழங்கி எங்கும் பரவின. -

தங்களுடைய ஆத்மார்த்த மூர்த்திகளைப் பூசிப்பவர் களாகிய சிவ பேர்களும், அவ்வாறு பூஜையைப் புரிந்து விட்டுத் துரயனவாகிய நடராஜப் பெருமானுடைய திரு வடிகளை விரும்புகிறவர்கள் சிலரும், "இனிமேல் பிறவாத, வரத்தை அருள் செய்வாயாக, மலம் அற்றவனே!” என்று வேண்டுகிறவர்கள் சிலரும், திருமுறைகளை ஏட்டுச் சுவடி களில் வரைந்து மகிழ்ச்சியை மிகுதியாக அடைந்து பெரிய புராணத்தைப் ப டி ப் ப. வ ர் க. ஸ் சில பேர்களுமாக இருந்து மகிழ்ச்சியை அடைந்தார்கள். தெளிவான அலைகளை வீசும் சமுத்திரத்தின்மேல் மிதந்த அழகிய தோணியில் வீற்றிருக்கும் வள்ளலாகிய தோனியப் பரிடம் பக்தியைக் கொண்டவர்களும் சீசாழியில்வாழ்பவர் களும் ஆகிய பக்தர்களும், மடாலயம் ஒவ்வொன்றிலும் சிறுவர்களும் மெல்ல அமர்ந்து படிக்கின்ற பெரியபுராணத் தில் உள்ள விருத்தங்களைக் கிளிகள் கேட்டுத் தாங்களும் அவற்றைப் பாடிக் கூறுவனவாக இருந்தன. அவற்றை நா.கணவாய்ப் புட்கள் கேட்டு மகிழ்ந்தன.

அதைப் பார்த்து மகிழ்ச்சியை அடைந்த நல்ல உள்ளங்: களோடும் தன்னைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களோடு படைத்தலைவர்களும் சூழ்ந்து வர விரைவாகச் சேக்கிழார் பெரிய புராணத்தை அரங்கேற்றும் இடத்திற்கு அரசன் வந்து கூட்டமாகக் கூடித் தமிழ்நாடு சிறந்த செல்வத்தை அடைந்தது என ஒப்பற்ற உவகை யினால் ஒரு சுற்றுத் தன்னுடைய உடம்பு பெருத்து விட்டான். . . . . . . . . . . . .

தும்புருவும் நாரத முனிவரும் இசைப்பாடல்களைப் பாடினார்கள்; தேவ லோகத்தில் வாழும் தெய்வப் பெண்