பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 35

குப்பை கூளம் புழுதி முதலியவை போகும் வண்ணம் மக்கள் துடைப்பங்களைக் கொண்டு பெருக்கித் தள்ளினார் கள்; குழைவு உண்டாகும் வண்ணம் கோமியத்தைக் கரைத்த நீரைத் தெளித்துத் தரையைப் பெண்கள் குளிர்ச்சியை அடையுமாறு செய்தார்கள். தழைகளும் மலர் களும் கட்டின தோரணங்களையும், துவசங்களையும், மெல்லிய ஆடைகளையும் அமைய சவத்து அழகு உண்டாகுமாறு திருவீதிகளைப் புதிய தெருக்களைப் போல் விளங்கும் வண்ணம் செய்தார்கள்.

திருநெறித்தமிழாகிய தேவாரத் திருப்பதிகங்களை ஒதும் வன்மையைப்பெற்ற ஒதுவார்கள், சைவ ஆகமங் களைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற சிவாசாரியார்கள், பல ஞான சாத்திரங்களைக் கற்ற ஞானிகள், நான்கு வேதங் களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய வேத விற்பன்னர்கள், குருவாக இருப்பதற்குரிய தகுதியைப் பெற்ற ஆசாரியர்கள், இலக்கணங்களையும் இலக்கியங் களையும் கற்றுத் தேர்ச்சி பெற்ற புலவர்கள், பல பெருங்காப்பியங்களை விரித்துப் பொருள் உரைக்க வல்ல சொற்பொழிவாளர்கள் ஆகியவர்களும் கூடினார்கள்.

நடராஜப்பெருமான் திருநடனம் புரிந்தருளும் திருச் சிற்றம்பலத்தின் முற்றத்தை வேதியர்கள் கோமயத்தைக் கரைத்த நீரால் மெழுகிவிட்டுச் சுண்ணாம்பைத் தரையில் தடவித் தரையின்மேல் ஆறு கால்களைப் பெற்று ஒரு பீடத்தை வைத்து, அதன்மேல் பச்சை நிறத்தை உடைய பட்டை,விரித்து, அதற்குமேல் ஒரு வெள்ளையான துணியை மடித்து வைத்து, தேனையுடைய மலர்களை அந்தப் பீடத் தின்மேல் துரவி, நறுமணம் கமழும் தூபத்தைக் காட்டி, ஆசனத்தை அமைத்து, தெளிவான செந்தமிழ் மொழி யினால் சேக்கிழார் இயற்றிய தொண்டர் புராணமாகிய பன்னிரண்டாம் திருமுறையை அந்த ஆசனத்தின்மேல் வைத்து, அந்தக் காப்பியத்தை வணங்கி வாழ்த்தினார்கள்,

பெ. 3'