பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பெரிய புராண விளக்கம்

'திருத்தொண்டர் புராணத்தைத் தேவரீரே படித்துப் பாடல்களினுடைய அர்த்தத்தைத் திருவாய்மலர்ந்தருளிச் செய்வீர்களாக' என்று சோழ மன்னன் முதலிய சிவ. பெருமானுடைய அடியவர்கள் யாவரும் வேண்டிக்கொள்ள, அதைக் கேட்டுக் குன்றத்தூரில் திருவவதாரம் செய்தருளிய, முனிவராகிய சேக்கிழார் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமான், உலகெலாம்” என்று. தொடக்கத்தை எடுத்து வழங்கியருளத் தாம் பாடியருளிய, சைவசமயத்தவர்களாகிய நாயன்மார்களின் வரலாறுகளை விரிவாக எடுத்துத் திருவாய் மலர்ந்தருளிச் செய்யச் சுற்றியிருந்த அம்பலவாணருடைய அடியவர்கள் எல்லோரும் வேதங்களில் உள்ள வார்த்தைகள் அடங்கியது. இந்தப் புராணம் என்று எண்ணித் தங்களுடைய கைகளைக் கூப்பிக் கும்பிட்டுச் சேக்கிழார் எடுத்துக் கூறும் பொருளைக் கேட்டார்கள்.

“தம்முடைய திருவடிகளில் அணிந்த அழகிய சிலம்புகள் ஒலிக்கத் திருநடனம் புரிந்தருளும் இயல்பைப்பெற்ற நட ராஜப் பெருமானுக்குப் பொருத்தமான நாம நட்சத்திம் மும், ஆளுடையபிள்ளையாராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சீ காழியில் திருவவதாரம் செய்தருளிய நட்சத்திரமும், அந்த நாய னார் அழுது சீகாழியில்

பிரமபுரீசர் ஆலயத்தில் உள்ள கட்டுமலையில் ஒரு தோணியில் தோணியப்பரோடு அமர்ந்திருக்கும் பெரிய நாயகியார் தம்மு ைட ய கொங்கைகளிலிருந்து

கறந்த பாலை ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவ. ஞானத்தைக் குழைத்து வழங்க அதைக் குடித்தருளிய நட்சத்திரமும் ஆகிய திருவாதிரை நட்சத்திரம் சித்திரை

மாதத்தில் வரும் நாளில் பெரிய புராணத்தில் உள்ள பாடல்களின் பொருளை எடுத்துக் கூற ஆரம்பித்து அடுத்த ஆண்டில் சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் அந்தப் புராணத்தின் பொருளை விரித்துச்