பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெரிய புராண விளக்கம்

சோறு, இனிய சுவைகளைப் பெற்ற வாழைப்பழம், மாம் பழம், பலாச்சுளை ஆகிய பழங்கள், புளிங்பு, இனிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, காரம், கைப்பு என்னும் ஆறு சுவை களைப் பெற்ற பல வகையான கறியமுதுகள், புத்துருக்கு நெய், தயிர், திரட்டுப்பால், தேன், பல வகையான இனிய பணியாரங்கள், குடிக்கத் தண்ணீர், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை அந்த மக்களுக்குச் சோழ மன்னனுட்ைய கட்டளைப்படி மந்திரிகள் ஒவ்வொரு நாளும் வழங்கி

邸下了打óG第厂。 -

சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் நின்று கொண்டு திருநடனம் புரிந் தருளும் நடராஜப் பெருமானுக்கு அன்று முதலாக மகாபூஜை நடக்குமாறு செய்து, அளவு இல்லாத புகழைப் பெற்றவர்களாகிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் வேதியர்களுக்கும் வேறு வேறாக அரிசிகள், கறியமுதுகள் முதலிய எல்லாவற்றையும் செங் கோலைச் செலுத்தும் சோழ மன்னன் ஒவ்வொரு நாளும் தவறாமல் வழங்கி வர, நடராஜப்பெரு - மானுடைய அடியவர்கள் வந்து நிறைந்து கூடிப் பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் தவத்தைப் புரிந்த பெரும்பற்றிப் புலியூராகிய சிதம்பர மாநகரம் பூலோகத் தில் உள்ள சிவலோகத்தைப் போல் விளங்கிக் காட்சிஅளித்தது. * -. .

பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணப் பாடல்களைத் தொகுப்பவர்கள், அவற்றை ஏடுகளில் எழுதுபவர்கள், அவற்றை அமர்ந்து கொண்டு படிப்பவர் கள். அந்தப் பாடல்களின் அர்த்தத்தை விரித்துரைப்பவர் கள், அவற்றைச் சிரவணம் செய்பவர்கள், மகிழ்ச்சியை அடைந்து தங்களுடைய தலைகளை அசைத்துப் பாராட்டிக் குதூகலத்தை அடைபவர்கள், புன்னகை பூப்பவர்கள், தியானிப்பவர்கள், குன்றத்துனரில்திருவவதாரம்செய்தருளிய