பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு - 37

முனிவராகிய சேக்கிழார் நாயனார் செய்த அருமையார் தவத்தை எண்ணிப் பார்ப்பவர்கள், அம்பலவாணர் முள் காலத்தில், உலகெலாம்' என்று அடியெடுத்து வழங்கி யருள இந்த நாயனார் பாடியருளினார்' என்று கூறுபவர் கள், 'இந்தப் பெரிய புராணத்தைக் கேட்ட சோழ மன்ன னுடைய காதுகளுக்கு இனிமேல் சீவகசிந்தாமணியாகிய சமணர்களுடைய பொய்யான காப்பியம் கேட்க விருப்ப மாக இருக்குமோ?' என்று கூறுபவர்கள் ஆகிய யாவரும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள். -

இத்தகைய சிறப்போடு திருத்தொண்டர் புராண மாகிய பெரிய புராணத்தை அமர்ந்திருந்து கேட்டுப் பக்தர்கள் கொண்டாட, அந்தப் புராணத்தின் அரங் கேற்றம் நடந்து அடுத்த ஆண்டில் சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் நிறைவேறியது; அதைப் பார்த்து நடராஜப் பெருமானுடைய திருத்தொண்டர்கள் ஹர, ஹர என்று முழங்கும் பேராரவாரம் எழுந்து பொங்கி வர அந்த ஆரவாரம் சமுத்திரத்தில் அலைகள் எழுப்பும் ஒலியை விழுங்கிவிட்டு, முழக்கத்தைச் செய்யும் ஏழு சமுத் தி ர ங் களி ல் எழும் அலைகளின் ஒசையைத் தாழ்வுடையதாகச் செய்து, பிரம்ம தேவனுடைய சத்திய லோகத்தளவும் சென்று முழங்கி, தேவர்களுடைய காது களை நிறையச் செய்து, அதற்கு மேலும் பொங்கி எழுந்து பொன்னுலகமாகிய தேவலோகத்துக்கு அப்புறத்திலும் சென்று சேக்கிழாருடைய புகழை விளங்கச் செய்தது.

திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் என்னும் பன்னிரண்டாம் திருமுறையைத் தில்லை வாழ் அந்தணர்கள் சில மூலமந்திரங்களைச் சொல்லி அருச்சனை யைப் புரிந்து அந்த நூலை வணங்கி, இருக்கு வேதம் முதலாகிய நான்கு வேதங்களைப் போல இன்று முதல் இந்தப் பெரிய புராணமும் ஐந்தாவது தமிழ்வேதம் என்று தங்கள் உள்ளங்களில் எண்ணி, திருவமுது, வெற்றிலை,