பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - பெரிய புராண விளக்கம்

பாக்கு, நறுமணம் கமழும் துன்பம், தீபம், கவரி, குடை, கண்ணாடி, ஆரத்தி, விபூதி ஆகியவற்றை அளவாக வைப்பதைப் பார்த்துச் சோழ மன்னன் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தைப் பச்சை நிறத்தைப் பெற்ற பட்டாடையால் சுற்றித் தங்கத்தால் ஆகிய ஒரு பாத்திரத்தில் வைத்தான். . . -

அந்தப் பெரிய புராணத்தை மதங்களை ஒழுகவிடும் பட்டத்து யானையினுடைய தலையின்மேல் தங்கப் பாத்திரத்தோடு எடுத்து வைத்த பிறகு சேக்கிழார் நாயனாரை முறைப்படி அந்த யானையின்மேல் ஏற்றி வைத்துச் சோழ மன்னனும் அவரோடு கூட யானையின் மேல் ஏறி இரண்டு கவரிகளைத் தன்னுடைய இரண்டு கைகளாலும் வீசினான்; இருக்கு வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேத ம் என்னும் நான்கு வேதமந்திரங்களையும் வேதியர்கள் கானம் செய்ய, தேவலோகத்தில் வாழும் தேவர்கள் கற்பக மரத்திற் பூத்த மலர்கள்ை மழையைப் போலப் பொழிய, சிதம்பரத்தில் விளங்கும் ஒரு திரு வீதியை வலமாக வரும் சமயத்தில் நடராஜப் பெருமானுடைய திருவருளைச் சிந்தித்து வீரத்தைப் பெற்ற சோழமா மன்னன், இது அல்லவா அடியேன் முன்பிறவியில் புரிந்த தவத்தின் பிரயோசனம்' என்று கூறினான். பட்டத்து யானையின்மேல் இவர்கள் ஏறி வருவதைப் பார்த்தவர்கள் ஒவ்வொரு தெருவையும் சுத்தமாகப் பெருக்கி, வாழைமரங்களையும் நட்டுவைத்து, பூரண கும்பத்தையும் வைத்து, நெற்பொரிகளையும் மிகுதி யாக இறைத்து, பொன்னரி மாலையையும் நறுமணம் கமழும் மலர் மாலைகளையும் தொங்கவிட்டு, தோரணங் களை வரிசை வரிசையாகக் கட்டித் தொங்கவிட்டு, நறுமணம் கமழும் துாபத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டு, ஒளிவீசும் திருவிளக்குகளையும் ஏற்றி வைத்து, மாணிக்கங்களைப் பதித்த விளக்குகளையும்