பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு , 39

தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, வேத மந்திரங்களை எடுத்து ஒதிப் பெருமையைப் பெற்ற வேதியர்கள் எதிர் கொண்டு வரவேற்று அறுதம்புற்களை எடுத்து வர, தேவ லோகப் பெண்கள் எல்லோரும் வாழ்த்துக்களை எடுத்துக் கூறி வாழ்த்தினார்கள்.

'சோழச்சக்கரவர்த்தி இவர்; தவமுனிவர் இவர்,சோழ மன்னர் இந்தச் சேக்கிழாருக்குக் கவரி வீசுவது தகுதியான செயலோ?' என்று சில மக்கள் கூறுபவர்கள் ஆனார்கள். சேக்கிழாராகிய அரசர் சிவபெருமானே ஆன சிறப்பு இது; இவருக்குச் செய்யும் சிறப்பு நல்ல சிறப்பே' என்று சிலர் சொல்வானார்கள், 'தேவர்களும் எழுத முடியாத வேதத்தைத் தமிழ் மொழியில் இயற்றித் தேவாரத் திருப் பதிகங்களைப் பாடியருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நர்யனார் என்னும் மூன்று நாயன்மார்களும் ஒன்று சேர்ந்து ஒப்பற்ற முதல்வராகி இந்தப் பூமண்டலத்தில் திருவவதாரம் செய்தருளிய முதற் பரம்பொருளே இவர்' என்று பாராட்டிச் சிலர் கூறினார்கள்.

மேகங்களின் கூட்டங்கள் மின்னலைமின்னி மழையைப் பெய்தன; தேவலோகத்தில் வாழும் தேவர்கள் நறுமணம் கமழும் கற்பகமரத்தில் மலர்ந்த பொன்னிற மலர்களை மழையைப் போலப் பொழிந்தார்கள்; சேக்கிழார் நாயனார் யாவரும் ஆனந்தத்தை அடையும் வண்ணம் தம்முடைய நாவிலிருந்து இனிய சொற்களாகிய மழையைப் பொழிந்தார்; சோழச் சக்கரவர்த்தி யாசகம் செய்பவர்களுடைய வறுமை போகும் வண்ணம் தன்னுடைய கைகளால் அள்ளி அள்ளித் தன்னுடைய கருவூலத்திலிருந்து முகந்து கொண்டு வந்து பொற்காசு களை மழையைப் போல வழங்கினான்; நடராஜப் பெருமா லுடைய பக்தர்கள் எல்லோரும் உருக்கத்தை அடைந்த