பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரிய புராண விளக்கம்

உள்ளங்களோடு தம்முடைய கண்களிலிருந்து ஆனந்தத் துளிகளை மழையைப் போலப் பொழிந்தார்கள்.

'இனிய சுவையை உடைய இராமாயணமாகிய கதையைச் சுலோக வடிவத்தில் பாடியருளிய வால்மீகி பக வானும் இந்தச் சேக்கிழாருக்குச் சமானமானவர் அல்லர்' என்று சிலர் கூறினார்கள்; "விதிமுறைப்படி மகாபாரதத். தைப் பாடியருளி முடித்த வேத வியாச முனிவரும் இவருக்கு ஒப்பானவர் அல்லர்:சிதைதல் இல்லாத வண்ணம் ஆயிரம் நாக்குகளைப் பெற்றவனும் சிறந்த அறிவுடை யவனும் ஆகிய ஆதிசேடனாகிய சிறப்பை உடையவனும் இவருக்கு நிகர் அல்லன், பொதிய மலையில் வாழ்ந்த குறு முனிவனாகிய அகத்தியனும் புகழையுடைய இந்தக் குன்றத்தார் முனிவருக்கு இணையானவன் அல்லன்' என்று பலர் கூறினார்கள்.

உலகத்தில் வாழும் மக்கள் எல்லோரும், "இந்தச் சேக்கிழாருடைய திருமேனியில் அணிந்திருக்கும் சைவர் களின் அடையாளமாகிய உருத்திராட்ச மாலையும், யாவரும் காணும் வண்ணம் இவர் திருமேனியில் பூசியுள்ள வெண்மையான விபூதியும், பெரிய புராணத்தை எழுதிய திருக்கரமும், அழகிய உருத்திராக்க மணியைக் கட்டியிருக் கும் கழுத்தும், பிரகாசம் வீசும் ஏட்டுச்சுவடியை வைக்கும். பையும், பெரிய புராணமாகிய நூலை எழுதிய ஏட்டுச் சுவடியும், உருகுகின்ற திருவுள்ளம் நெகிழுந்தோறும் ஹர ஹர என்று சொல்லும் திருநாமங்களும், நாம் எல்லோரும் உஜ்ஜீவனத்தை அடையுமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்கின்ற கருணையும் அழகாக உள்ளன' ' என்று வியந்து பாராட்டிச் சேக்கிழாரை வணங்கினார்கள்.

வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருக்கும் மயிலைப் போன்றசாயலைப் பெற்றகலைமகள் தான் அமர்ந்திருக்கும் அந்த மலரை மறந்து விட்டாள்:தமிழ்ச்சங்கத்தில் வீற்றிருக்