பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 4}.

கும் நல்லிசைப்புலவர்களுடைய இனிய சொற்கள் அடங்கிய பாடல்களை மறந்து போனாள்: நாட்டில் வாழும் வட மொழி வித்துவான்கள் பாடிய சுபாஷி தங்களுடைய பிர யோசனத்தையும் மறந்து விட்டாள்; தாமரை மலரில் ॐग्C!ः:ं । தருளியிருக்கும் பிரம தேவனுடைய நாச்சையும் மறந்த போய்விட்டாள்; பொதிய மலையின் உச்சியில் இருந்த புண்ணியத்தைப் புரிந்த அகத்திய முனிவன் என்னும் முனி வேந்தனையும் மறந்தாள்; சேக்கிழாராகிய அரசருடைய அழகிய நாக்கில் வந்து குடியேறினாள்.

இவ்வாறு வேதம் விதித்த முறை யி ல் இந்த உலகத்தில் வாழும் மக்களும், தேவலோகத்தில் வாழும் தேவர்களும், வேறு உலகங்களில் வாழ். பவர்களும் தம்மைச் சுற்றி வர, அழகிய வீதியை வலமாக வந்து சேர்ந்து, திருச்சிற்றம்பலத்தின் முற்றத்தில் தாங்கள் ஏறியிருந்த பட்டத்து யானையின் தலையிலிருந்து இறங்கி, வந்து சோழ மாமன்னனும், பெரிய புராணத்தைப் பாடி யருளிய சேக்கிழாராகிய மன்னரும் மூன்று புரிகளை உடைய யூனுாலை அணிந்த தில்லைவாழ் அந்தனர் களோடு வந்து பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தை நடராஜப் பெருமானுடைய அழகிய சந்நிதியில் வைத்தார்கள். - -

எல்லா அண்டங்களிலும் வாழ்பவர்களுக்குத் தலைவ. ராகிய நடராஜப் பெருமானாருடைய எதிரில் யாவரும், தண்டாகாரமாகத் தரையில் விழுந்து சேக்கிழாரை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து வந்து கீர்த்தியைப் பெற்ற சேக்கிழார் பரம்பரையில் திலகத்தைப் போல விளங்கும் சேககிழாருக்கு எ ல் லோரும் எண்ணிப் பார்த்து அவருக்கு வழங்கிய சிறப்புப் பெயராகத் தொண்டர் சீர் பரவுவார் என்று ஒரு. திருநாமத்தைச் சூட்டி ஞான மகுடத்தையும் அவருட:ை தலையில் அணிந்து முன்னால் உள்ள ஆயிரங்கy