பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-42 பெரிய புராண விளக்கம்

மண்டபத்தில் அமரச் செய்து அந்தச் சேக்கிழாரைச்

சோழச்சக்கரவர்த்தி பணிந்தான்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தர மூர்த்தி நாயனார் என்னும் மூன்று நாயன்மார்களும் பாடியருளிய பாசுரங்களை ஏழு திரு முறைகளாகவும், திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் ஒரு திருமுறையாகவும், திருவிசைப்பாக்களை ஒரு திரு முறையாகவும், திருமூலர்பாடியருளிய திருமந்திரமாலையை ஒரு திருமுறையாகவும், திருவால்வாயுடையார் அருளிச் செய்த திருமுகப்பாசுரத்தை முதலாக வைத்துக் கோத்த திருமுறை ஒன்றாகவும், சேக்கிழார் நாயனார் பாடியருளிய பெரிய புராணத்தை ஒரு திருமுறையாகவும் வைத்து, உமாதேவியைத் தம்முடைய வாமபாகத்தில் வைத்த வருடைய திருவருள் சிறப்பாக அமைந்த திருமுறைகள் பன்னிரண்டு என்று வகுத்து நம்பியாண்டார் நம்பி அமைத்தார். . -

தோடுடைய செவியன்' என்று தொடங்கும் பாசுரத்தைக் கொண்ட பதிகம்முதல் பல திருப்பதிகங்களை உடைய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய . திருநெறிய செந்தமிழாகிய திருப்பதிகங்களோடு இந்தப் பெரிய புராணம் ஒப்பாக விளங்கும் என்று அந்தப் புராணத்தைச் செப்புத் தகடுகளில் வரையச் செய்து நடராஜப் பெருமானாருடைய சந்நிதியில் உயரமான பீடத்தில் வைத்தார்கள்; இது பாலாறு சுற்றி ஒடும் தொண்டை மண்டலத்தில் வாழ்பவர்கள் முற்பிறவியில் செய்த தவத்தின் பயன்; நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங்கும் குன்றத்துாராகிய வளப்பத்தைப் பெற்ற நகரத்தில் வாழ்பவர்கள் புரிந்த தவத்தின் பயன்; ஒப்பு இல்லாத பெருமையைப் பெற்ற கங்கா குலதிலகராகிய