பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச்ேக்கிழார் வரலாறு 43

சேக்கிழார் புரிந்த பெரிய தவத்தின் பயன்' என்று பலர் பாராட்டினார்கள். -

அந்தச் சமயத்தில் அநபாயச் சோழமன்னன், இந்தச் சிறப்பான நிலைமை இருப்பதனால் இதைப் பார்த்து மகிழ் வதற்குச் சேக்கிழாருடைய தம்பியாராகிய பாலறாவாயர் எங்கே இருக்கிறார்?' என்று கேட்டான். இரண்டு பக்கங் களிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள் பின்வருமாறு கூறினார்கள்; 'பரிசுத்தமாகிய குன்றத்துரரென்னும் வளநகரத்தில் உள்ள மலையின்மேல் தம்முடைய திரு நாமம் விளங்கும் வண்ணம் ஒரு திருக்குளத்தை வெட்டச் செய்த பிறகு திருநாகேசுவரத்தில் கோயில் கொண்டிருக்கும் நாகேசுவரருடைய திருப்பணிகளைச் செய்து கொண்டு அந்தத் தவத்தில் தங்கியிருக்கிறார்.”

அவ்வாறு அந்தப் பக்தர்கள் கூற, அந்தப் பாலறா வாயரை அழைத்துக் கொண்டுவரச் சொல்லி, அவர் வந்த பிறகு, 'இவர் என்னுடைய அமைச்சர்; இவருடைய பட்டம் தொண்டைமான்'என்று சூட்டி நறுமணம் கமழும் மாலையை அவருக்கு அணிந்தான் சோழமன்னன். பிறகு ப ா ல ற ா வா ய ர் தொண்டை மண்டலத்தில் அந்தக் காலத்தில் ப ஞ் ச ம் உண்டாகத் தம் மிடம் வந்து அடைந்த மக்களுக்குச் செல்வம், ஆடை முதலியவற்றை வழங்கி, 'தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமான்' என்று தம்முடைய திருநாமத்தை எல்லா இடங்களிலும் நிலைபெறுமாறு செய்தார்.

தொண்டர் சீர் பரவுவாராகிய சேக்கிழார் நாயனார் என்னும் அரசர் பரிசுத்தமான சிதம்பர மாநகரத்தில் பழைய காலத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகிய மூன்று நாயன்மார்களும் பாடியருளிய தேவாரத் திருப் பதிகங்களில் பாடப் பெற்ா அறுபத்து மூன்று நாயன்