பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெரிய புராண விளக்கம்

மார்களினுடைய வரலாறுகளைத் தெரிந்துகொண்டு நடரா ஜப்பெருமானுடைய அடியவர்களோடு அருமையான தவத்தில் அமர்ந்திருந்து, பிறகு இண்டை மலரை அணிந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையிற்பெற்ற அம்பலவாண ருடைய தூக்கிய திருவடியின் நிழலை அடைந்தார்.

சிதம்பரத்தில் விளங்கும் ஆலயத்தில் உள்ள மாணிக் கங்களைப் பதித்த திருச்சிற்றம்பலத்தில் எல்லாக் காலத்திலும் திருநடனம் புரிந்தருளும் அழகிய கண்களைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானுடைய செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகள் வாழ்க! சீகாழி நகரத் தில் வாழும் மக்கள் நல்வாழ்வு பெறும் வண்ணம் திருவவ தாரம் செய்தருளியவரும் திருநெறிய தமிழாகிய தேவாரத் திருப்பதிகங்களைப் பாடி வழங்கியருளிய வள்ளலுமாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடிகள் வாழ்க! பக்தர்கள் திரிபுண்டரமாக அணிந்த விபூதியும், இரண்டு சட்டைகளும் வாழ்க! குன்றத்துாரில் திருவவ தாரம் செய்தருளிய முனிவரும், சேக்கிழார் பரம்பரையில் உதித்த தலைவரும் ஆகிய சேக்கிழார் நாயனார் திருவாய் மலர்ந்து பாடியருளிய பெரிய புராணம் வாழ்க!

ஒளி விளங்கும் மேகத்தை அளாவிய குன்றத்தூரின் தலைவரும், தொண்டர் சீர் பரவுவாரும் ஆகிய சேக்கிழார் நாயனார் வாழ்ந்த திருமாளிகையின் திருவாசல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் இனி வரும் காலத் திலும் வாழையடி வாழையாய்த் தென்றல் காற்று வீசும் மாணிக்கங்களைப் பதித்த மண்டபத்தில் அரசர்களாக வீற்றிருக்கும் முடிமன்னர்களாகிய சேர சோழ பாண்டியர் களுக்கும் பரமேசுவரனுடைய பக்தர்களாகிய நாயன்மார் களுடைய வரலாறுகளைப் பா டி ய ரு வரி ய பெரிய புராணத்தை எடுத்துச் சொல்லி நன்மையை அடையும்.

பல அண்டங்களில் வாழ்பவர்கள் வணங்கும். . - - - w - ... f. தில்லையம்பலவாணர் அடியை எடுத்து, 'உலகெலாம்