பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 45

என்றுவழங்கத் தொண்டர் சீர் பரவுவாராகியசேக்கிழாரும், அரசர்கள் வழங்கும் வரிசைகளைப் பெற்றவரும், குன்றத் தூர் என்னும் நகரத்தின் தலைவரும், தொண்டை மண்டலத்தின் அதிபதியும், திருநெறிய தமிழ் வல்ல தலைவரும், செந்தாமரை மலர்களைப் போன்ற திருக்கரங்களைப் பெற்றவரும், மேகத்தைப் போல் இரவலர்களுக்குச் செல்வமழையைப்பொழிபவரும் ஆகியவ ருடைய பசும்பொன்னாற் செய்த வீரக்கழலைப்பூண்ட திருவடிகளாகிய செந்தாமரை மலர்களை வணங்கித் தம்முடைய பாவங்களைப் போக்குபவர்கள் இனிமேல் உண்டாகும் பிறவியை அடைய மாட்டார்கள்.

(இந்த வரலாறு உமாபதி சிவம் அருளிச் செய்த சேக்கிழார் நாயனார் புராணத்தைத் தழுவி எழுதப் பெற்றது.)