பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப ா யி ர ம்

பெரிய புராணத்தில் தொடக்கத்தில் விளங்குவது பாயிரம், அதில் முதலில் உள்ள மூன்று பாடல்களும். கடவுள் வாழ்த்துக்கள். முதல் பாடலின் கருத்து வருமாறு: 'இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் யாவரும் அறிந்து கொண்டு தன்னுடைய பெருமைகளை எடுத்துச் சொல்லுவதற்கு அருமையாக இருப்பவனும், பிறைச் சந்திரனும் அலைகள் வீசும் கங்கையாற்றின் நறும்புனலும் தங்கிய சடாபாரத்தைத் தன்னுடைய தலையிற் பெற்ற வனும், அளவு இல்லாத சோதி வடிவத்தைப் பெற்றவனும், சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம் பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிந்தருளுபவனுமாகிய நடராஜப் பெருமானுடைய சிலம்புகளை அணிந்து மலர்ச் சியைப் பெறும் திருவடிகளை வாழ்த்தி வணங்கு வோமாக. பாடல் வருமாறு:

'உலகெ லாம்.உணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த் தி வணங்குவாம்.'