பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 57

கரியாய் வெளியாய் போற்றி.', 'செய்யானை வெளி யானைக் கரியான் தன்னை.”, “செய்யானே திருமேனி", மேனிச் செய்யானைத். 'திருவானைக் காவுனை.' 'பவளமால் வரைபோல் மேனிச் செய்யானை.', 'செய் யவன்கான் செய்யவளை மாலுக் கீந்த சிவனவன்காண் ' என்று திருநாவுக்கரசு நாயனாரும், செய்யார் மேனி யனே.', 'செய்யவ னாகி வந்து , 'செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே', 'ஐயா செய்யாய் வெளியாய்', செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன்.", "செய்ய நம்பிசிறு செஞ்சடை நம்பி.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், செய்யவனே சிவனே.', 'செய்யா வெண்ணிறாடி செல்லா.', செய்யானை வெண்ணிறணித் தானை.', 'அயன்மாற்கறி யொண்ணாச் செய்ய மேனி யனே.”, 'தழற்பிழம் பன்ன மேனிச் செய்யனே.” என்று மாணிக்க வாசகரும், செய்யான் கருமிடற்றான்'. என்று கபிலதேவ் நாயனாரும், செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கு', செய்யை பசியை வெளியை.", என்று பட்டினத்துப் பிள்ளையாரும் பாடியருளிய வற்றைக் காண்க. திரு- அழகைப் பெற்றதும். ப், சந்தி. பேரம்பலம்-பெருமையைப் பெற்றதுமாகிய திருச்சிற்றம் பலத்தை செய்- சிவப்பானதும். தாய-பரிசுத்தமானதும் ஆகிய பொன்- தங்கத்தால், அணி. வேய்ந்த சோழன்சோழ மன்னனாகிய நீடுழி- நெடுங்காலம். பார்- உலகத் தில். ஆய- உண்டாகிப் பரவிய. சீர்- சீர்த்தியைப் பெற்ற, அநபாயன்- அநபாயச் சோழ மன்னனுடைய அரசவைஅரச சபைக்களத்தில் வீற்றிருக்கும் சான்றோர்கள் இட ஆகுபெயர். மேய-மேலிய. இவ்வுரை- அடியேன் பாடிய இந்தப் பாடல்களை ஒருமை பன்மை மயக்கம். விரும்பும்விரும்புவார்கள்; திணை மயக்கம். ஆம்: அசை நிலை. அநபாயன்- இரண்டாம் குலோத்துங்க சோழமன்னன். இந்த மன்னன் திருச்சிற்றம்பலத்தைத் தங்கத்தால் வேய்த்