பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 பெரிய புராண விளக்கம்

உலகத்தில் கீர்த்தியைப் பெற்றவனும் ஆகிய அநபாய சோழ மன்னனுடைய அவைக்களத்தில் வீற்றிருக்கும் சான்றோர்கள், மேவிய இந்த அடியேனுடைய பாடல்களை ஏற்றுக் கொண்டு விருப்பத்தைப் பெறுவார்கள்.'

பாடல் வருமாறு:

' மேய இவ்வுரை கொண்டுவிரும்புமாம்

சேய வன் திருப் பேரம் பலம்செய்ய துனய பொன்னணி சோழன்கீ டுழிபார் ஆய சீர் அரு பாயன் அரசவை'.

சேயவன் - சிவப்பு நிறத்தைப் பெற்ற திருமேனியை உடையவனாகிய நடராஜப் பெருமானுடைய 'சிவன் எனும்பெயர் தனக்கே உடைய செம்மேனியம்மான்' என்பதையும், செய்ய மேனி வெளிய பொடிப்பூசுவர்.' செய்யன் வெய்யபடை ஏந்தவல்லான்”, செய்யர் செய்ய சடையார்.', 'திருமேனி செய்யார்', 'செய்யான் உறை கோயில் சிற்றம்பலத் தானே.”, “திருமேனிச் செய்யான் வெண்ணிறணிவான்', 'செய்ய மேனிக் கரியம்மிடற்றார்" செய்யமேனிச் செழும்புனற கங்கைச் செஞ்சடைஐயன்." கோழம்பம் மேவிய செய்யானை', 'செய்யவன் உறை விடம் திருவிற் கோலமே.”, “செய்யன் வெள்ளியன், செய்ய னேதிரு ஆலயாய் மேவிய ஐயனே' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், செய்யர் வெண்ணுரவர், செய்யவர் கரிய கண்டர்', வெள்ளியர் கரியர் செய்யர்', பால்அங்கம் தோள்மேல் கொண்ட செய்யனை', 'செய்ய மேனி வெண்ணிற்றர்.', செய்ய மேனி வெண்ணிறணிவான்தனை.”, “செய்யமேனி யன் தேனோடு பால்தயிர் நெய்ய தாடிய நீலக்குடி அரன்.', 'செய்யனே கரியனே கண்டம்.”, “செய்யதிரு மேனி வெண்ணிறாடி.", செய்யன்காண் கரியன்காண்', செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானை', செய்ய திருமேனி வெண்ணிற் றான்காண்', செய்யாய்