பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 55

பாடல் வருமாறு:

செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால் அப்பொருட்குரை யாவரும் கொள்வரால் இப்பொருட்கென் உரைசிறி தாயினும் மெய்ப்பொ ருஸ்குரியார்கொள்வர் மேன்மையால்",

செப்பல். முதல் முதலாக மழலைச் சொற்களைப் பேசுவதை உற்ற - தொடங்கிய பொருளின்-தங்களுடைய குழந்தையின். பொருள்-குழந்தை; 'தாரகனைப் பொருத பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்' என வருவதைக் காண்க. -

சிறப்பினால் - சிறப்புக் காரணமாக. அப்பொருட்குஅந்த மழலைச் சொற்களின் அர்த்தத்துக்கு. உரை - ஏற்ற சொற்கள்ை; ஒருமை பன்மை மயக்கம். யாவரும்-அந்தக் குழந்தையை ப் பெற்ற எல்லாப் பெற்றோர்களும்.கொள்வர்தெரிந்து கொள்வார்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆல்: அசைநிலை. இப்பொருட்கு - இந்தப் பெரிய புராணம் என்னும் காப்பியத்தைப் பாடுவதற்கு.என்-அடியேனுடைய. உரை- சொற்கள்; ஒருமை பன்மை மயக்கம். சிறிதுசிறுமையை உடையவை; ஒருமை பன்மை மயக்கம். ஆயினும் - ஆனாலும். மெய்- உண்மையான. ப்: சந்தி . பொருட்கு-பொருளைத் தெரிந்து கொள்வதற்கு. உரியார் - உரிய அறிவைப் பெற்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மேன்மையால் - நாயன்மார்களுடைய மேம்பாடு காரண மாக. கொள்வர் - ஏற்றுக் கொள்வார்கள்; ஒருமை பன்மை மயககம. - -

பின்பு உள்ள 8-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: சிவப்பு நிறத்தைப் பெற்ற திருமேன்ரியை உடைய நடராஜப் பெருமானுடைய அழகியதும் பெருமையைப் பெற்றதும் ஆகிய திருச்சிற்றம்பலத்தைப் பரிசுத்தமான செம் பொன்னால் வேய்ந்த சோழ மன்னனும், நீடுழி இந்த