பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

函4 பெரிய புராண விளக்கம்:

தொடங்கினேன்; பெருகி வருகின்ற தெளிவான கடலில், உள்ள ஊற்று நீர் முழுவதையும் குடிக்கும் பேரவாலைப் பெற்றதாகிய ஒரு நாயைப்போல இருக்கும் இயல்பை உடையவன் அடியேன்'. பாடல் வருமாறு:

தெரிவ ரும்பெரு மைத்திருத் தொண்டர்தம் பொருல் ரும் சீர் புகலலுற் றேன்முற்றப் பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருங்சை ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்." இதுவும் சேக்கிழார் கூற்று. தெரிவரும்-அறிந்து கொள் வதற்கு அருமையாகிய பெருமை- பெருமையைப் பெற்ற. த்:சந்தி. திருத்தொண்டர்தம்- திருத்தொண்டர்களாகிய நாயன்மார்களுடைய, தம்: அசைநிலை; ஒருமை பன்மை மயக்கம். பொரு அரும்- ஒப்புக் கூறுவதற்கு அருமையாக உள்ள சீர்-சீர்த்தியை. புகலலுற்றேன்- அடியேன் பாடத் தொடங்கினேன். பெருகு-பெருகி வரும். தெண்- தெளிவைப் பெற்ற கடல்-சமுத்திரத்தில் உள்ள. ஊற்று-ஊற்று நீரை: ஆகுபெயர். முற்ற- முழுவதும், ப்:சந்தி. உண்- குடிக்கும். பெரு நசை பேராசையை உடைய. ஒரு கணங்கனை-ஒரு நாயை. ஒக்கும்-போல இருக்கும். தகைமையேன்இயல்பைப் பெற்ற அடியேன்.

அடுத்து வரும் 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு: முதல் முதலாக மழலைப் பேச்சுக்களைப் பேசத் தொடங்கிய ஓர் இளங் குழந்தையின் சிறப்பினால் அந்தப் பேச்சுக்களுக்கு உரிய அர்த்தத்தை அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள். அதைப்போல இந்த நாயன்மார்களின் வரலாறாகிய பொருளைப் பாடுவதற்கு அடியேன் பாடும் பாடல்கள் சிறுமையைப் பெற்றவை ஆனாலும் உண்மையான .. கருத்தை அறிந்து கொள்வதற்கு உரிய அறிவைப் பெற்ற வர்கள் நாயன்மார்களுடைய மேம்பாட்டினால் இந்தப் புராணத்தை ஏற்றுக் கொள்வார்கள், !