பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யேன் பாடத் தொடங்குகிறேன்; அந்த நாயன்மார் களுடைய அளவைக் கூட அடியேனால் பாட முடியா விட்டாலும் அளவு இல்லாத ஆசை அடியேனைப் பிடர் பிடித்து உந்தப் பாடத் தொடங்குவேன். பாடல் வருமாறு

அளவி லாத பெருமைய ராகிய அளவி லா அடி யார்புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்பரி தாயினும் அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்.” இது சேக்கிழார் கூற்று. அளவு இலாத அளவே இல்லாத, இலாத-இடைக்குறை. பெருமையர் ஆகிய- பெருமையைப் பெற்றவர்கள் ஆகிய; ஒருமை பன்மை மயக்கம். அளவுகனக்கு. இலா இல்லாத இடைக்குறை. அடியார்- சிவ பெருமானுடைய அடியவர்களாகிய நாயன்மார்கள் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். புகழ் புகழை. கூறுகேன்அடியேன் பாடத் தொடங்குகிறேன். அளவு- அவர் ருடைய அளவைக் கூட. உரைப்பு-அடியேன் பாடுவது அரிதாயினும் - முடியாத வண்ணம் அருமை உள்ளதாக இருந்தாலும். அளவு இல்- அளவு இல்லாத இல்: கடைக் குறை. ஆகை - அவா. துரப்ப அடியேனைப் பிடர் பிடித்து உந்த அறைகுவேன். பாடத் தொடங்குவேன். இவ்வாறே -கம்பரும் கூறுகிறார். அவர் பாடிய அந்தக் கருத்து உள்ள பாடல் வருமாறு: - . .

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு பூசை முற்றவும் 5க்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக் - காசில் கொற்றத் திராமன் கதையரோ,' அடுத்து உள்ள 6 ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

அறிவதற்கு அருமையாக உள்ள பெருமையைப் பெற்ற திருத்தொண்டர்களாகிய நாயன்மார்களுடைய நிகர் இல்லாத கீர்த்தியை அடியேன் பாடத்