பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெரிய புராண விளக்கம்

விதிப்படி இந்தப் பூமண்டலத்தில் விளக்கத்தை அடைந்து வெற்றியைப் பெறுவதாக! பாடல் வருமாறு,

'மதி வளர் சடைமுடி மன்றுளசாைழன் துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர் பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே'

மதி-பிறைச் சந்திரன். வளர்-தங்கிய, சடை - சடா பாரத்தை முடி-தம்முடைய தலையில் பெற்றவரும். மன்று- சிதம்பரத்தில் உள்ள திருக்கோயிலில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தை. உளாரை- தாம் திருநடனம் புரிந் தருளும் அரங்கமாகப் பெற்றிருப்பவரும் ஆகிய நடராஜப் பெருமானாரை; இடைக்குறை. முன்-முன் காலத்தில், துதி-தோத்திரம். செயும்-புரிந்த; 3 || 8 பயக்கம்;இடைக்குறை. நாயன்மார்-நாயன்பார்களுடைய. தூய சால்-பரிசுத்தமாகிய சொற்கள்' என்னும், ஒருமை. பன்மை மயக்கம். மலர்மலர்களில்; ஒருமை பன்மை மயக்கம். பொதி- நிறைந்துள்ள, நலன்-நன்மையாகிய தேனை. நுகர்தரு குடிக்கும். புனிதர்-வண்டுகளைப் போன்றவர்களும், பரிசுத்தமானவர்களும் ஆகிய .ெ தா ன் டர் க ளு ைடய ஒருமை பன்மை மயக்கம், பேரவை- பெருமையைப் பெற்ற சபை. விதிமுறை விதிமுறைப்படி. விளங்கி- விளக்கத்தை அடைந்து. வெல்க-வெற்றியைப் பெறுதாகுக. ஏ! ஈற்றசை நிலை. இந்தப்பாடலில் ஏகதேச உருவகம் அமைந்துள்ளது.

அடுத்து வரும் ஐந்து பாடல்கள் அவையடக்கம். 5-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - அளவு இல்லாத பெருமையைப் பெற்றவர்களும்.

  • . ಹಣ ಹಕ್ರ இல்லாதவர்களும் ஆகிய சிவபெருமானுடைய அடியவர்களாகிய நாயன்மார்கள் பெற்ற புகழை அடி