பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பாயிரம் 5I

மரபு, "கைம்மா வேழத்து.', 'வேழக் கைபோல்.’, ‘கருங் கை யானையின் ஈருரி போர்த்த கள்வனார்.', 'பருக்கை .யானை' என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், "கைம்மத யானை உரித்த பரஞ்சுடரே", "பனைக்கை மும்மத வேழம்', 'துளைக்கை வேழத் துரியுடல் போர்த் தவர்', "கைம்மான மதகளிற்றின் உரிவையான்', 'பொருங்கை மதக்கரி', "கைம்மான மதகளிற்றை உரித் தான்றன்னை', 'கைவேழம்' என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

த்: சந்தி. தாழ்- தொங்கும். செவி- காதுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். நீள்- உயரமான முடி- கிரீடத் தையும், ச்: சந்தி. கட-கன்னமதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுக விடும்; ஒருமை பன்மை மயக்கம். க்- சந்தி. களிற்றை- ஆண் யானையின் முகத்தைப் பெற்ற வினாயகப் பெருமானை, திணை மயக்கம். க், சந்தி. கருத்துள்- நம்முடைய உள்ளத்துள்; இது சேக்கிழார் தம்மையும் பெரிய புராணத்தைக் கேட்பவர்களையும் சேர்த்துக் கூறியது. இருத்துவாம்வைத்துத் தியானிப்போமாக.

அடுத்து வரும் 4ஆவது பாடல் திருக்கூட்டத்தின் சிறப்பைக் கூறுகிறது. அதன் கருத்து வருமாறு:

பிறைச்சந்திரன் தங்கும் சடாபாரத்தைப் பெற்ற தலையை உடையவரும், சிதம்பரத்தில் உள்ள திருக் கோயிலில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தைத் தாம் திரு நடனம் புரிந்தருளும் அரங்கமாகப் பெற்றிருப்பவரும் ஆகிய நடராஜப் பெருமானாரை முன்காலத்தில் தோத்திரம் புரிந்த நாயன்மார்களுடைய வரலாறாகிய பெரிய புராண த்தில் உள்ள பரிசுத்தமான சொற்களாகிய மலர்களில் நிறைந்துள்ள நன்மையாகிய தேனைக் குடிக்கின்றவர் களும், துயவர்களும்ாகிய தொண்டர்களின் பெரிய சபை