பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரிய புராண விளக்கம்

கொன்றுண்டு விண்ணப்பம்.', 'பொன்னங் கழலடிக்கே" என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'பொன்னங் கழலுக்கே சென்று தாய் கோத்தும்.பீ.', 'பொன்னார் கழல் பணித் தாண்டபிரான்', 'கழலிணைகள் பொன்னானவா பாடி', 'வானவரும் தான வரும் பொன்னார் திருவடிதாம் அறியார்” என்று மாணிக்கவாசகரும் பாடியருளிய வற்றைக் காண்க.

பிறகு உள்ள 3-ஆவது பாடலின் கருத்து வருமாறு:

‘அடியேன் பாடத் தொடங்கும் இந்தப் பெருமையைப் பெற்றதும், நாயன்மார்களினுடைய வரலாறுகளைச் சொல்வதுமாகிய பெரிய புராணம் இனிய சொற்சுவையும் பொருட்சுவையும் பெற்ற செந்தமிழ்ப் பாடல்களாக நடக்கும் மேம்பாட்டை எமக்கு அளித்தருள விசாலமான ஐந்து கைகளையும், தொங்குகின்ற காதுகளையும், உயர மான கிரீடத்தையும், மூன்று மதங்களையும் பெற்ற ஆண் யானையாகிய விநாயகப் பெருமானை நம்முடைய உள்ளத்துள் வைத்துத் தியானிப்போமாக,' பாடல் வருமாறு: -

“ எடுக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய்

நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி ள்ே முடிக் கடக்க ளிற்றைக் கருத்துள் இருந்துவாம்.'

எடுக்கும் அடியேன் பாடத் தொடங்கும். மாபெருமையைப் பெற்ற. க்சந்தி. கதை- நாயன்மார் களுடைய வரலாறுகளாகிய பெரிய புராணம், ஒருமை பன்மை மயக்கம். தட- விசாலமாகிய, க்சந்தி. கை. கைகள்; ஒருமை பன்மை மயக்கம். ஐந்து உடை ஐந்தைப் பெற்ற: ஐந்து கைகளாவன:இயல்பான கைகள் நான்கும், துதிக்கை ஒன்றும் ஆகும். துதிக்கையைக் கை என்று கூறுவது