பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+o முனனுரை

பெரிய புராணத்தில் உள்ள பாடல்களின் பொருளை விரிவாக எழுதும் பணியில் ஈடுபட்டு முருகன் திருவருளால் முதற் பகுதி நிறைவேறியது. பாடல்களை விளக்கும்போது முதலில் பொழிப்புரையைத் தந்து, பிறகு பாடலை எழுதி, அப்பால் சொற்களின் பொருள்களையும்,இலக்கணக்குறிப்புக் களையும், ஒப்புடிைப் பகுதிகளையும் காட்டியிருக்கிறேன். ஒப்புமையாகக் காட்டிய பகுதிகள் சங்க நூல்கள், திருமுறை கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, கம்ப ராமாயணம் முதலிய நூல்களில் உள்ளனவ.

இந்த விளக்க நூலை வெளியிடும் பணியை மயிலாப்பூரில் புகழ் பெற்று விளங்கும் அல்லயன்ஸ் கம்பெனியார் ஏத்துக் கொண்டுள்ளார்கள். அந்தக் கம்பெனி ைநிறுவிய அமரர் இப்புசாமி ஐயர் பல அருமையான நூல்களை நல்ல முறை: யில் வெளியிட்டார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திர சட்டர்ஜி, ரவீந்திரநாத் டாகுர் முதலியவர்களின் நூல்களை யும், எஸ். வி. வி. முதலிய தமிழ்ப் புலவர்கள் எழுதிய நூல்களையும் அழகாகப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ் நாட்டுச் சிறுகதைகள் என்ற பெயரில் தமிழ் எழுத்தானர் களின் சிறுகதைகனைத் தனித்தனியே வெளியிட்டார். அவ் வாறு பல புத்தகங்கள் வெளியாயின. இவற்றையல்லாமல், கதைக் கோவை’ என்ற பெயரோடு ஐந்து தொகுதிகளை வெளியிட்டார். அவருடைய பணியைப் பின்பற்றி அவரு டைய புதல்வர்கள் மேலும் பல நூல்களை வெளியிடும் தொண்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களுடைய ஆதரவு இந்தக் கம்பெனியாரின் வெளியீடுகளுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

'காத்து மனை:

Qoror-28 - • . கி. வா. ஜகந்நாதன் 1987 س?س 20