பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு - 67

'தலைவனாகிய கைலாசபதி அமர்ந்திருக்கும் பாக்கியத் தைப் பெற்றது. ஆகையால் பிரபஞ்சத்தில் இருக்கும் அந்தர் மத்திய பாதலம் என்ற மூன்று உலகங்களில் வாழ்ப வர்களும், இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும், கணக்கு இல்லாததும், பெருமையைப் பெற்றதுமாகிய தவத்தைப் புரிந்ததனால் வந்து சேர்ந்த புண்ணியச் செயல்கள் யாவும் ஒரு சேரத் திரண்டு இருப்பதைப் போல விளங்குவது திருக் கயிலாய மலை. பாடல் வருமாறு:

' அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின் கண்ணும் மூன்றுல கும்.நான் மறைகளும் எண்ணில் மாதவம் செய்யவந் தெய்திய புண்ணி யந்திரண் டுள்ளது போன்றது.” அண்ணல்- தலைவனாகிய கைலாசபதி, வீற்றிருக்கப் பெற்றது- அமர்ந்திருக்கும் பாக்கியத்தைப் பெற்று விளங்குவது. ஆதலின்-ஆகையால்,நண்னும்-பிரபஞ்சத்தில் இருக்கும்.மூன்று உலகும்- அந்தர் மத்திய பாதலம் என்னும் மூன்று உலகங்களில் வாழ்பவர்களும், இடவாகுபெயர். உலகு, ஒருபை பன்மை மயக்கம். அந்தர் உலகம்-தேவர் உலகம்;அதில் வாழ்கிறவர்கள் தேவர்கள். மத்திய உலகம்இந்தப் பூமண்டலம்; இதில் வாழ்கிறவர்கள் மனிதர்கள். பாதலம்-பாதாள உலகம்; இதில் வாழ்கிறவர்கள் நாக அரசர்கள்.நான்மறைகளும்- இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும்.எண்-கணக்கு இல்-இல்லாத கடைக்குறை. மா-பெருமையைப் பெற்ற. தவம்-தவத்தை. செய்யபுரிய. வந்து எய்திய- வந்து சேர்ந்த புண்ணியம்புண்ணியச் செயல்கள் ஒருமை பன்மை மயக்கம். திரண்டு. ஒன்றாகச் சேர்த்து. உள்ளது. இருப்பதை, போன்றது- பேல விளங்குவது திருக்கயில்ாயமலை தோன்றா எழுவாய். . . . .