பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 7 I

வித்தியாதர்கள் மீட்டிப் பாடும்; ஒருமை பன்மை மயக்கம். வீணையின்-வீணைகளில் எழும்; ஒருமை பன்மை மயக்கம், ஓசையும். இனிய நாதமும். கார்-மேகங்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். எதிர்-எதிரில். தானம்- கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுக விடும்; ஒருமை பன்மை மயக்கம். மாக்கள். யானைகளாகிய விலங்குகள். முழக்கமும்-பிளிறும் பேரொலியும். தாகெடு தல். இல்-இல்லாத கடைக்குறை. சீர்-சீர்த்தியைப் பெற்ற. வான ஆகாய துந்து பி- துந்துபிகளின்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்பும்- முழக்கமும். மருங்கு- அந்தத் திருக் கயிலாய மலையின் பக்கங்களில்; ஒரும்ை பன்மை மயக்கம். எலாம்- எல்லா இடங்களிலும் கேட்கும். எலாம்: இடைக் குறை. கேட்கும் என்ற சொல்லை வருவித்துப் பொருளை முடிக்க. - .

யானையின் பிளிறலுக்கு மேகத்தின் முழக்கம்: "கைம் மாமத கரியின் இனம் இடியின்குரல் அதிர,” என்று திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும்.'மழையென முழங்கும் தாறுபாய் கரி' என்று கம்பரும் பாடியிருப்பவற்றைக் காண்க. . . . . - . . . . . -

பிறகு உள்ள 5-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: குளிர்ச்சியைக் கொண்ட ஆகாயத்திலிருந்து வந்து தேவர்கள் வணங்கிச் சுற்றி வருவதால் அவர்கள் அணிந்த எண்ண முடியாத கோடிகளாகியவையும் அவர்கள் தங்களுடைய தலைகளில் அணிந்தவையும் ஆகிய மாலை களும், தூய்மையான கற்பக மரத்திலிருந்து பெற்ற பொன்னரி மாலைகளும், முனிவர்கள் அஞ்சலிகளைச் செய்யும் வரிசையும் அந்தத் திருக்கயிலாய மலையினுடைய முன் பக்கங்களில் உள்ள எல்லா இடங்களிலும் காட்சி. அளிக்கும். பாடல் வருமாறு: