பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரிய புராண விளக்கம்

" பணிவி சும்பில் அமரர் பணிந்துசூழ் அனித கோடி அணிமுடி மாலையும் புனித கற்பகப் பொன்னரி மாலையும் முனிவர் அஞ்சலி மாலையும் முன்பெலாம்.'

பனி- குளிர்ச்சிய்ைப் பெற்ற, விசும்பில்-ஆகாயத்தில் உள்ள தேவலோகத்திலிருந்து வந்த அமரர்- தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பணிந்து-கைலாசபதியைவணங்கி விட்டு. சூழ். வலம்வரும்போது. அனித- கணக்கு இல்லாத. கோடி-கோடிகள்ாகிய அணி. அந்தத் தேவர்கள் அணிந் திருந்த முடி-கிரீடங்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். மாலையும்-முத்து மா ைலக ளு ம்; ஒருமை பன்மை மயக்கம், புனித - தூய்மையான. கற்பக- கற்பகமரத்தி லிருந்து அந்தத் தேவர்கள் பெற்றுக் கொண்டு வந்திருந்த ப்: சந்தி. பொன்னரி மாலையும்-சரிகை மாலைகளும்; ஒருமை பன்மை மயக்கம். முனிவர் - கயிலைமலைக் குகைகளில் தவம் புரியும் முனிவர்கள் செய்யும்; ஒருமை பன்மை மயக்கம். அஞ்சலி- கைலாசபதியை அஞ்சலிகளைப் புரியும் ஒருமைபன்மை மயக்கம். மாலையும்-வரிசையும். முன்பு. கயிலாய மலையின் முன்பக்கங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்- எல்லாவற்றிலும் காட்சி அளிக்கும். எலாம்: இடைக்குறை. மாலை என்ற சொல் வேறு வேறு பொருள்களில் வந்தது. இது ஒரு சொற் பல் பொருள் அணி. 'காட்சி அளிக்கும் என்பதை வருவித்துச் செய்யுளின் பொருளை முடிக்க. . . . .

அடுத்து உள்ள 6-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: தேவர்கள் வந்து தங்கும் உயரமான மாளிகைகளையும், வேண்டுமானால் தாங்கள் விரும்பும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து பெரிய பூதங்களையும் கொண்டு வந்து நிறுத்துபவையான கோடி கோடி குட்டையான சிறிய பூதகணங்களையும், அந்தப் பூதங்கள்