பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 75

அடைந்தேன்." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 7-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'தலைவனாகிய கைலாச பதியின் வீரக்கழலைப் பூண்ட திருவடிகளை வணங்குவதற்கு வந்த நான்கு முகங்களைக் கொண்ட பிரம தேவன் உரிய கால்ம் அல்லாமையினால் திரும்பித் தன்னுடைய சத்திய லோகத்துக்குப் போக எண்ணியவன் பரிசுத்தத்தையும் பெருமையையும் பெற்ற கயிலாய மலையின் ஒளிவெள்ளத்தில் முழுகி ஒன்றாகிப் போன வெள்ளை நிறத்தைப் பெற்றதாகிய தன்னுடைய வாகனமாகிய அன்னப் பறவையையும் பார்க்க முடியாமல் சோர்வை அடைவான்., பாடல் வருமாறு:

" காய கன்கழல் சேவிக்க நான்முகன்

மேய காலம் அலாமையின் மீண்டவன்

தூய மால்வரைச் சோதியின் மூழ்கிஒன்:

றாய அன்னமும் காணாதயர்க்குமால்." நாயகன்-தலைவனாகிய கைலாச பதியினுடைய கழல் -வீரக் கழலைப் பூண்ட திருவடிகளை; ஆகுபெயர். ஒருமை பன்மை மயக்கம். கழல் இன்ன தென்பதை வே றோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. சேவிக்கவணங்கும் பொருட்டுக் கயிலாய மலைக்கு வந்த நான் முகன்-நான்கு முகங்களைக் கொண்ட பிரமதேவன். முகன்: ஒருமை பன்மை மயக்கம். மேய- கைலாச பதியைத் தரிசிப்பதற்கு உரிய காலம் நேரம். அலாமையின்அல்லாமையினால், இடைக்குறை. மீண்டு-திரும்பி. அவன்தன்னுடைய சத்தியலோகத்துக்குச் செல்ல எண்ணியவன். துர்ய - பரிசுத்தமானதும். மால் - பெருமையைப் பெற்றது மாகிய, வரை - கயிலாய மலை வீசும். சோதியின் ஒளி வெள்ளத்துக்குள் மூழ்கி முழுகி, ஒன்றாய ஒன்றாகிப் போன. அன்னமும் தன்னுடைய வாகனமாகிய அன்னப்