பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 77

காதில்-தன்னுடைய செவிகளில் ஒருமை பன்மை மயக்கம்.வெண்-வெள்ளை நிறத்தைப் பெற்ற குழையோன்

-சங்குக்குழைகளை அணிந்தவனாகிய கைலாசபதி, ' கு ைழ, ஒரு ைம ப ன் ைம | ம ய க் க ம் கா தி லங்குகுழையன்., 'குழையார் காதீர்.', 'தோடுடையான் குழையுடையான். 'சங்கோடிலங்கத் தோடுபெய்து

காதிலோர் தாழ்குழையான். 'ஒளிர்சங்கக் குழையா.”, "ஒருகாதில் தாயகுழை தாழ.','மன்னு காதில் குழையது.', 'குழைநுழை திகழ்செவி யழகொடு., 'நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்து.', 'காதில் மிளிரும் குழையர்.', "தோடுடையார் குழைக்காதில்.', 'சங்கவெண் குழைச் செவியன். ', 'தோடிலங்கு குழைக்காதர்.', 'சங்கணி குழை யினர்.', 'குழையொர் காதினிற் பெய்துகந்து,, 'ஒருகாது சேர்ந்த குழையான்.”, என்று திருஞானசம்பந்த மூர்ததி நாயனாரும், 'சங்கணி குழையும் வைத்தார்.', 'குழைத் திகழ் காதினன்.', 'குழைகொள் காதினர்:', 'காதார் குழையினர்.', 'கொள்ளைக் குழைக்காதில்.', 'காதி சைந்த சங்கக் குழை யினான்காண்.', 'குழையார் திருத் தோடுகாதிற்கண்டேன்.', 'குழையாட நடமாடும் கூத் தன்.", என்று திருநாவுக்கரசு நாயனாரும், "குழைத்தழுவு திருக் காதில்.', 'குழைவளர் காதுகள் மோத நின்றுகுனிப் பதே.', 'குண்டலம் குழைதிகழ் காதனே.', 'குழைகொள் காதன் குழகன்.', 'குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழை வென்னே..', 'குழைவிரவு வடிகாதா." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'குழையும் சுருள்தோடும்.” என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. கழல்- வீரக்கழலை அணிந்த திருவடிகளை, ஆகுபெயர். தொழ- வணங்குவதற்காக, நெடியோன்-உயரமான திருவுருவத்தைக் கொண்ட திருமால். காலம்-கைலாச பதியைத் தரிசிப்பதற்கு உரிய காலத்தை, பார்த்து- எதிர் பார்த்துக் கொண்டு. இருந்ததும்-காத்திருந்ததையும். அறியான் தெரிந்து கொள்ளாதவனாகி; முற்றெச்சம்.