பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - பெரியபுராண விளக்கம்

சோதி- ஒளிவெள்ளத்தை வீசும், வெண்-வெண்மை நிறத்தை உடைய வெள்ளியாலாகிய கயிலை- கயிலாய மலையினுடைய தாழ்வரை அடிவாரத்தில் உள்ள முழை யில்-ஒரு குகையில், துதிக்கையோன்-துதிக்கையை உடைய வனாகிய விநாயகப் பெருமானுடைய, ஊர்தியை- வாகன மாகிய மூஷிகத்தை. க்சந்தி. கண்டு-பார்த்து. மீதுஆகாயத்தின்மேல். எழு- உதயமாகிச் செல்லும். பண்டை-பழமையைப் பெற்ற, ச்சந்தி, செஞ்சுடர்சிவந்த சூரியன். இன்று- இன்றைக்கு. வெண்சுடர்வெண்மை நிறத்தைப் பெற்ற சந்திரனாக ஆனது- ஆகி விட்டது. என்று-என எண்ணி. அதன்கீழ்-அந்தக் கயிலாய மலையின் அடியில் ஆதி-தான் முன்காலத்தில் எடுத்த, ஏனமதாய்-பன்றியின் வடிவமுடையவனாய்; அது: பகுதிப்பொருள் விகுதி. இடக்கலுற்றான்- தோண்ட லானான். என்று- என எண்ணி, கலுழன்-திருமாலி னுடைய வாகனமாகிய கருடன். அதனை - அந்தப்பன்றி யினிடம்; உருபுமயக்கம். வந்து அணைதரும்- வந்து சேர்வான். . . . . . பிறகு உள்ள 9-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: தேவலோகத்துப் பெண்மணிகள் நடனம் ஆடும் போது கொட்டப்படும் மத்தளத்தின் ஒலியோடு கயிலாய மலையின் பக்கத்தில் அந்த மலையிலிருந்து குதிக்கும் அருவி கள் எதிருக்கு எதிரில் முழக்கத்தைச் செய்ய, கைலாச பதி யினிடம் வரத்தைப் பெறும் விருப்பத்தைக் கொண்ட உள்ளங்களோடு தெய்வத் தன்மையைக் கொண்டவையும், தேன் நிரம்பியவையும் ஆகிய கற்பக மரத்தில் மலர்ந்த மலர்களைத் தங்களுடைய இரண்டு கைகளிலும் எடுத்துக் கொண்டு இடையீடு இல்லாமல் எப்போதும் விமானத்திற் குப் போகும் படிக்கட்டுக்களாகிய மிகவும் உயர்ந்த வழியில் ஏறி இந்திரன் முதலாகும் தேவ்ர்கள் வாழ்த்திக் கைலாச