பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 793

பதியை வணங்க, அந்த அழகிய திருக்கயிலாய மலை யினுடைய வெளிப்பக்கம் விளங்குவதாக இருக்கும்.” பாடல் வருமாறு:

" அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் - அருவிகள் எதிரெதிர் முழங்க

வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ

மதுமலர் இருகையும் ஏக்தி கிரந்தரம் மிடைந்த விமானசோ பான

கீடுயர் வழியினால் ஏறிப் புரந்தரன் முதலாம் கடவுளர் போற்றப் பொலிவதத் திருமலைப் புறம்பு."

அரம்பையர் தேவலோகத்துப் பெண்கள். ஆடல்நடனம்ஆடும்போது கொட்டப்படும். முழவுடன்-மத்தளத் தின்சத்தத்தோடு ஆகுபெயர். மருங்கில்- கைலாயமலையின் பக்கத்தில். அருவிகள்-அந்த மலையிலிருந்து குதிக்கும்அருவி கள். எதிர் எதிர்-எதிருக்கு எதிராக. முழங்க- முழக்கத், தைச் செய்ய வரம்-கயிலாச பதியிடம் வரத்தை. பெறுபெற்றுக் கொள்ளும். காதல்-விருப்பத்தைக் கொண்ட, மனத்துடன்- உள்ளங்களோடு; ஒருமை பன்மை மயக்கம், தெய்வ- தெய்வத் தன்மையைப் பெற்றவையும். மதுதேன் நிரம்பியவையும் ஆகிய மலர்-கற்பக மரத்திலிருந்து பறித்த மலர்களை ஒருமை பன்மை மயக்கம். இருதங்களுடைய இரண்டு. கையும்-கைகளிலும், ஒருமை பன்மை மயக்கம். ஏந்தி-எடுத்துக் கொண்டு. நிரந்தரம்இடையீடு இல்லாமல் எப்போதும். மிடைந்த- நெருங்கிய விமான- கோபுரத்துக்குப் போகும். சோபானம்- படி களாகிய, ஒருமை பன்மை மயக்கம். நீடு- நீளமான. உயர்-உயரமான வழியினால்- வழியில் உருபு மயக்கம். ஏறி-மேலே ஏறி, ப், சந்தி, புரந்தரன்-இந்திரன். முதலாம். முதலாக இருக்கும். கடவுளர்- தேவர்கள். போற்ற