பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 95

னால் என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. ஆகும்-ஆக விளங்கும். தா-கேடு. இல்-இல்லாத கடைக் குறை. தனி-ஒப்பற்ற, ச்: சந்தி. சிவஞான சம்பந்தர்-சிவ ஞான சம்பந்தர் என்னும் மற்றொரு திருநாமத்தையும். ஆயினார்.பெற்றவர் ஆனார்.

பின்பு வரும் 70-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்த நிலையில் தவத்தைப் புரிந்த முதல்வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானம் புரியும் அழகு பெருகி எழும் சிவஞானத்தையும், இந்த மனிதப் பிறப்பை அடியோடு டோகுமாறு புரியும் பக்குவத்தோடு ஓங்கி எழுந்த மெய்ஞ் ஞானத்தையும், உவமை வேறு எதுவும் இல்லாத அறுபத்து நான்கு கலைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மெய்ஞ்ஞானத் தையும், அறிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள உண்மை யான ஞானத்தையும் தெரிந்து கொண்டார். பாடல் வருமாறு:

சிவனடியே சிங் திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஒங் கியஞானம் உவமை இலாக் கலைஞானம் உணர்வரிய

மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்.உணர்ந்தார் அந்நிலையில்.’ இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. அந்நிலையில்-அந்த நிலையில். தவ-தவத்தைப் புரிந்த, முதல்வர்-முதல்வராகிய, சம்பந்தர்தாம்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம்: அசைநிலை. சிவன். சிவபெருமானுடைய. அடியே-திருவடிகளையே; ஒருமை பன்மை மயக்கம். சிந்திக்கும்-தியானம் புரியும். திரு-அழகு. ப்: சந்தி, பெருகு-பெருகி எழும். சிவஞானம்-சிவஞானத்தை பும். பவமதனை-இந்த மானிடப் பிறவியை. அது: பகுதிப் பொருள் விகுதி. அற-அடியோடு போகுமாறு. மாற்றும். போக்கி விடும். பாங்கினில்-பக்குவத்தோடு: உருபு மயக்கம். ஒங்கிய-ஓங்கி எழுந்த ஞானம்-மெய்ஞ்ஞானத்தையும்.