பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - பெரிய புராண விளக்கம்-10

உவமை.தனக்கு ஒப்பாக வேறு ஒன்றும். இலா-இல்லாத க்: சந்தி. கலை-அறுபத்து நான்கு கலைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அந்தக் கலைகள் இன்ன என்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. ஞானம்-உண்மையான அறிவையும். உணர் வரிய-தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மெய்ஞ் ஞானம்-உண்மையான ஞானத்தையும். உணர்ந்தார் . தெரிந்து கொண்டார்,

பின்பு வரும் 71-ஆம்.கவியின் உள்ளுறை வருமாறு: ' 'எந்தப் பொருளையும் உண்டாக்கி அருள்பவன் பரமேசுவரனே' என்னும் உணர்ச்சியையும், அந்தப் பொருள் அடியேங்களை ஆட்களாக உடையவராகிய சிவ பெருமானாருடைய அடியவர்களே' என்னும் அறிவையும், இந்த வகையால் இவற்றை அல்லாமல் தம்முடைய சம்மதத் தைப் பெற்றுக் கொண்டு நடக்கும் பரிசுத்தம் இல்லாதவர் களாகிய சமண சமயத்தைச் சார்ந்த சமணர்களினுடைய துணிந்த கொள்கைகளும் பொடிப் பொடி ஆகுமாறு ஒர் உபாயத்தை எண்ணித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் தங்கியிருந்த திருமடத்திலிருந்து எழுந்து சென்றார்." பாடல் வருமாறு:

எப்பொருளும் ஆக்குவான் ஈசனே' எனும் உணர்வும், 'அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள்’

எனும் அறிவும். இப்படியால் இதுவன்றித் தம் இசைவு கொண்டியலும் துப்புரவில் லார் துணிவும் துகளாகச்

சூழ்ந்தெழுந்தார்.' எப்பொருளும்-எந்த வ ைக யா ன பொருளையும். பொருள்-செல்வம்' எனலும் ஆம் ஆக்குவான்-உண்டாக் கியருள்பவன். ஈசனே-பரமேசுவரனே. எனும்-என்னும்: இடைக்குறை. உணர்வும்-உணர்ச்சியையும். அப்பொருள் தான்-அந்தச் செல்வம். தான்: அசைநிலை. ஆளுடையார்அடியேங்களை அடிமைகளாகப் பெற்றவராகிய அந்தப்