பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் İÜ E

பெயர். ஞான-சிவஞானத்தைக் கொண்ட த்:சந்தி. திரு-அழகிய மொழியால்-வார்த்தைகளால் ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து உள்ள 75-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"வரம்பு இல்லாத வேதங்களில் முதலில் உள்ள மெய் யெழுத்தாகிய த் என்ற எழுத்தோடு தொடங்கிய ஏடுகளில் வரையும் வேதமாகிய வளப்பத்தைப் பெற்ற நீண்ட செந் தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தால் இந்தப் பெருமையைப் பெற்று விளங்கும் நிலவுலகத்தில் வாழும் மக்களுக்கு உபதேச மொழி சிறந்து விளங்கப் பல வகையான உயிர்களும் மகிழ்ச்சியை மிகுதியாக அடையுமாறு தம் முடைய பாசுரம் பரமேசுவரராகிய பிரமபுரீசரிடம் போகும் முறையைப் பெறுவதற்காகத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தப் பிரமபுரீசருடைய அழகிய செவிகளைச் சிறப்பாக எடுத்துப் பாடி. பாடல் வருமாறு:

' எல்லையிலா மறைமுதல்மெய் யுடன் எடுத்த

எழுதுமறை மல்லல்கெடும் தமிழால் இம் மாநிலத்தோர்க்

குரைசிறப்பப் பல்லுயிரும் களிகூரத் தம்பாடல் பரமர்பாற் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச்

சிறப்பித்து.' இந்தப் பாடலும் குளகம். எல்லை-வரம்பு. இலா-இல் லாத இடைக்குறை. மறை-வேதங்களில்: ஒருமை பன்மை மயக்கம். முதல்-முதலில் உள்ள. மெய்யுடன்-மெய்யெழுத் தாகிய 'த் என்ற எழுத்தோடு. எடுத்த-பாடத் தொடங்கிய. எழுது-ஏடுகளில் வரையும். மறை-வேதமாகிய, மல்லல்வளப்பத்தைப் பெற்ற சொற் சுவை, பொருட் சுவை, என் னும் வளப்பத்தைப் பெற்ற, நெடும்-நீண்ட காலம் இருக்கத் தகும். தமிழால்-செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப் ட திகத்தால்: ஆகுபெயர். இம்மா-இந்தப் பெருமையைப்