பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 10፻‛

அரக்கனுக்குத் தன்னுடைய திருவருளை வழங்கிய பாக்கி யத்தை எடுத்துக் கூறித் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்." பாடல் வருமாறு:

மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும்

வந்தடையிற் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும்

எனக்காட்டி எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிக் திசையாட அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா

டருள்செய்தார்.'

மண்ணுலகில்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இந்த மண்ணுலகத்தில். வாழ்வார்கள்-வாழும் மக்கள். பிழைத்தாலும்-பிழைகளைப் புரிந்தாலும், வந்துதம்மிடம் வந்து. அடையின்-புகலாக அடைவார்களானால், கண்ணுதலான்-நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் படைத்த கைலாசபதி. பெரும்.பெருமையைப் பெற்று விளங்கும். கருணை-கருணையை.கைக்கொள்ளும்-கைக்கொள்வார்கள்: ஒருமை பன்மை மயக்கம். என-என்று; இடைக்குறை. க் சந்தி. காட்ட-எடுத்துக் காட்டுவதற்காக, எண்ணம்-நல்ல எண்ணம். இலா-சிறிதும் இல்லாத இடைக்குறை. வல்வ லி ைம ைய ப் .ெ ப ற் ற. அரக்கன்-இராக்கதனாகிய இராவணன். எடுத்து-கைலாய மலையைத் தூக்கி. முறிந்துதன்னுடைய கைகள் ஒடிந்து, இசை-இசைப் பாடல்களை: ஒருமை பன்மை மயக்கம். பாட-அந்த அரக்கன் பாட அண்ணல்-த ைல வ ன கி ய அ ந் த க் கைலாசபதி, ‘அண்ணல்-பெருமையைப் பெற்றவன்' எனலும் ஆம். அவற்கு-அந்த இராவணனுக்கு. அருள்புரிந்த-தன்னுடைய திருவருளை வழங்கிய, ஆக்கப்பாடு-பாக்கியத்தை எடுத்துக் கூறி. அருள்செய்தார்-திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

இநதச் செய்தியைப் புலப்படுத்தித் திருஞான சம்பந்த, மூர்த்தி நாயனார் பாடியருளிய பாசுரங்கள் வருமாறு: