பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் km&。

மடக்கொடி யவர்கள் வருபுனல் ஆட வந்திழி அரிசிலின் கரைமேல்

படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்

பாம்புர நன்னக ராரே...'

பொன்னங் கானல் வெண்திரை சூழ்ந்த

பொருகடல் வேலி இலங்கை

மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி

மாமுர ணாகமும் தோளும்

முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த

மூவிலை வேலுடை மூர்த்தி

அன்னம் கன்னிப் பேடையொ டாடி

அணவு பெருந்துறை வாரே...'

' கல்லார் வரைஅரக்கன் தடந்தோள் கவின்வா.

ஒல்லை அடர்த்தவனுக் கருள்செய்த திசையுள் பல்லார் பகுவாக நகுவெண் தலைசூடி வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே,க

மாவடைந்த தோரரக்கன் வலிதொலைவித் தவன்றன் நாவுடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யும், சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே."

அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை யன்றெடுப்பச் சுந்தரத்தன் திரவிரலால் ஊன்ற அவ னுடல்நெரிந்து மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானும் கொந்தரத்த மதிச்சென்னிக்கோளிலிஎம் பெருமானே.”

' இருளைப் புரையும் நிறத்தி லரக்கன் றனை ஈ டழிவித்து அருளைச் செய்யும் அம்மான் நேரா ரந்தண் கந்தத்தின் மருளைச் சுரும்பு பாடி அளக்கர் வரையார்

திரைக்கையால் தரளத் தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே."