பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 119

  • " தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்

தொழார் வழுவான மனத்தாலே மாலாய மாலயனும் இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை விழுவார்கள் அஞ்செழுத்துத் துதித்துய்ந்த

படிவிரித்தார்.' தொழுவார்க்கே-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், தன்னை வணங்கும் பக்தர்களுக்கே ஒருமை பன்மை மயக்கம். சிவபெருமான் அருளுவது-சிவபெருமான் தன்னுடைய திருவருளை வழங்குதல் உண்டு. என-எனவும்: இடைக்குறை. தி: சந்தி. தொழார்.தன்னை வணங்காதவர் களாகி; முற்றெச்சம்: ஒருமை பன்மை மயக்கம். வழுவானபிழையை உடையவை ஆன. மனத்தால்-உள்ளங்களோடு: உருபு மயக்கம்: ஒருமை பைைம மயக்கம். ஏ. அசைநிலை மாலாய-மயக்கத்தை அடைந்தவர்களாகிய: ஆகுபெயர். மால்-திருமாலும். அயனும்-பிரமதேவனும். இழிவாகும்தாழ்வாகிய பிறப்பைப் பெற்றவையாகும். கருவிலங்கும்கரிய மிருகமாகிய பன்றியும். பறவையுமாய்-அன்னப் பறவையுமாக உருவங்களை எடுத்துக் கொண்டு திருவடி களையும் திருமுடியையும் தரையைத் தோண்டிப் பார்த்துத் தேடியும், மேலே பறந்து சென்று தேடியும். எய்தாமைஅவற்றை அடைய முடியாமையால். விழுவார்கள்-சோர்வை அடைந்து.தரையில் விழுபவர்களாகிய அந்த இருவரும். அஞ்சு எழுத்து-ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக கவ் அடங்கிய பஞ்சாட்சரத்தை. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம்.த்:சந்தி. துதித்து-ஒதிச் சிவபெருமானைத் துதித்து. உய்ந்தபடி-உஜ்ஜீவனத்தை அ ைட ந் த வண்ணத்தை. விரித்தார்-விரிவாக எடுத்துத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

அடுத்து உள்ள 79-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

‘அடியேங்களுடைய தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் 'இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம