பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 20 - பெரிய புராண விளக்கம்-10

வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் திருவாய் மலர்ந்தருளிச் செய்த காரண புருஷராகிய வெண் மையாகிய பிறைச் சந்திரன் தங்கியிருக்கும் சிவந்த சடாபாரத்தைத் தன்னுடைய தலையின் மேற் பெற்ற தலை வனாகிய பிரமபுரீசனுக்கு உரிய சைவ சமய வழியைத் தெரிந்து கொண்டு உஜ்ஜீவனத்தை அடையாதவர்களும், தங்களுக்குள்ளே நல்ல எண்ணங்களைத் தங்களுடைய உள் ளங்களில் மேற்கொள்ளும் ஞானம் இல்லாதவர்களுமாகிய சமணர்களாகிய இழிந்த குணங்களையும் இழிந்த செயல்

களையும் பெற்றவர்களுடைய சமய நெறியும் பெளத்தர்

களினுடைய சமய நெறியும் பழி உடையவையாகப் புரியும் குற்றத்தை உடையனவே' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

வேத காரணராய் வெண்பிறைசேர் செய்யசடை காதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே கலம்கொள்ளும் போதம் இலார் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும் ஏதமே என மொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்." இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. எங்கள்-அடியேங்களுடைய; இது சேக்கிழார் தம்மையும் பிற திருத்தொண்டர்களையும் சேர்த்துக் கூறி யது. பிரான்-தலைவராகிய, ஒருமை பன்மை மயக்கம். சம்பந்தர்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். வேதஇருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களையும், ஒருமை பன்மை மயக்கம், காரணராய்-திருவாய் மலர்ந்தருளிச் செய்த காரண புருஷராகிய, வெண்-வெண்மை நிறத்தைப் பெற்ற. பிறை-பிறைச் சந்திரன். சேர்.தங்கியிருக்கும். செய்ய. சிவந்த சடை-சடாபாரத்தைத் தன்னுடைய தலையின் மேற் பெற்ற நாதன்-தலைவனாகிய பிரமபுரீசனுக்கு உரிய பிரமபுரி-சீகாழி. நெறி-சைவ சமய வழியை. அறிந்துதெரிந்து கொண்டு. உய்யார்-உஜ்ஜீவனத்தை அடையாத வர்களும்; ஒருமை பன்மை மயக்கம். தம்மில்-தங்களுக்குள்.